கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி நடைக்கு முட்டுக்கட்டை போடுமா சிஎஸ்கே? - இன்று பலப்பரீட்சை

By செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் சீசனில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்த ஆட்டம் இன்று இரவு7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த சீசனில் முதல் 2 ஆட்டங்களையும் வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே அணி,அடுத்த 2 ஆட்டங்களிலும் தோல்விகண்டது. 3-வது ஆட்டத்தில் டெல்லி அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் ஹைதராபாத் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வி கண்டது சிஎஸ்கே.

இந்நிலையில் இன்று மீண்டும் சொந்த மைதானத்துக்கு திரும்பியுள்ளது சிஎஸ்கே. எனவே, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி, இந்தஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க முழு முயற்சி செய்யும்என்பதில் சந்தேகமில்லை. கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளைப் பெற்று வலுவாக உள்ளது.எனவே, அந்த அணியின்தொடர் வெற்றிக்கு சிஎஸ்கே வீரர்கள் முட்டுக்கட்டை போடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

கடந்த 4 ஆட்டங்களில் சிஎஸ்கே வீரர்கள் ஷிவம் துபே, அஜிங்கிய ரஹானே ஆகியோர் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ், டேரில் மிட்செல் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை.

எனவே, இன்றைய ஆட்டத்தில் அவர்களிடமிருந்து உயர்மட்ட செயல்திறனை எதிர்பார்க்கலாம். அதைப் போலவே ரஹானே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டேரில் மிட்செல், எம்.எஸ். தோனி ஆகியோரிடமிருந்தும் அருமையான பேட்டிங் திறன் வெளிப்படக்கூடும். டெல்லி அணிக்கு எதிரானஆட்டத்தில் தோனி 16 பந்துகளில் 37ரன்களை விளாசியிருந்தார். எனவே, இன்று நடைபெறும் ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் தோனியின் சிறப்பான மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.

பந்துவீச்சில் தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே, ஜடேஜா ஆகியோர் எதிரணி வீரர்களை மிரட்டக் காத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது கொல்கத்தா அணி. அந்த அணி கடைசியாக நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றிருந்தது.

அந்த அணியின் சுனில் நரேன், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஆந்த்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங்,வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். அவர்களிடமிருந்து மிகச்சிறந்த ஆட்டம் இன்றைய போட்டியில் வெளிப்படக்கூடும்.

பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ரஸ்ஸல், சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி, அரோரா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி மிரட்டினர். எனவே இன்றைய ஆட்டத்தில் அவர்கள் சிஎஸ்கே அணிக்கு கடும் நெருக்கடி தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

39 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

9 hours ago

மேலும்