அகில இந்திய அளவிலான விளையாட்டு போட்டி: தமிழக தீயணைப்பு, மீட்பு படை வீரர்கள் 23 பதக்கங்கள் வென்று சாதனை

By செய்திப்பிரிவு

அகில இந்திய அளவில் நடைபெற்ற தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் பல்வேறு பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்பு துறை கல்லூரியில் கடந்த 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை இந்திய தீயணைப்பு வீரர்கள் மற்றும் அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கைப்பந்து, கால்பந்து, டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் நாடு முழுவதும் உள்ள 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் என மொத்தம் 68 அணிகள் பங்கேற்றன. இப்போட்டிகளில் அலுவலர் மற்றும் பணியாளர்கள் என 1500 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகத்தின் சார்பாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் தலைமையில் 6 அலுவலர்கள், உதவி மாவட்ட அலுவலர்கள் மற்றும் 42 தீயணைப்பு வீரர்களும் கலந்து கொண்டனர். 40 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவுகளாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

பாராட்டு

இதில் தமிழக தீயணைப்பு வீரர்கள் 11 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்கங்களை வென்றனர். வெற்றியோடு திரும்பிய வீரர்களை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துணை இயக்குநர் கே.பி.மகேந்திரன் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்