‘ஏழைகளின் மிட்செல் ஜான்சன்?’ - வஹாப் ரியாஸ் மீது ஜாலி கலாய்ப்பு

By இரா.முத்துக்குமார்

வியாழக்கிழமையன்று பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிகள் தொடங்கின, அன்று முல்தான் சுல்தான்ஸ் அணி, கடந்த சாம்பியன் பெஷாவர் ஜால்மி அணியை வீழ்த்தினர்.

ஆனால் இந்தப் போட்டியை விட பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸின் புதிய தோற்றம் ‘நகரத்தின் பேச்சு’ ஆக மாறியுள்ளது.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் போல் ஒரு பிரெஞ்ச் தாடியை வஹாப் ரியாஸ் வைத்துக் கொண்டு புதிய தோற்றத்தில் வளையவர ட்விட்ட வாசிகளின் ஜாலி கலாய்ப்புக்கு ஆளானார்.

பெஷாவர் கேப்டன் மொகமது ஹபீஸ் இந்த புதிய தோற்றமுடைய வஹாப் ரியாஸுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது தன்னைத்தானே உத்வேகம் கூட்டிக் கொள்ள மிட்செல் ஜான்சன் போல் மீசை வைத்துள்ளார் என்று சிலரும், ஏழைகளின் மிட்செல் ஜான்சன் என்று சிலரும் வஹாப் ரியாஸின் புதிய தோற்றத்தை வர்ணித்து வருகின்றனர்.

வஹாப் ரியாஸும் இதனை ஒப்புக் கொண்டு கூறிய போது, “யாராவது மூலம் ஊக்கமடைவது என்பது நமக்கு பயனளிக்கும் என்றால் அப்படி செய்யலாம்தானே. நான் மிட்செல் ஜான்சனைப் பார்த்து உத்வேகம் பெற்றேன் என்றால் அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மிட்செல் ஜான்சன் ஒரு ஆஷஸ் தொடரில் 34 விக்கெட்டுகளைக் கைப்பற்றியபோது இதே தோற்றத்தில்தான் இருந்தார். ஒருவேளை வஹாப் ரியாஸுக்கு அது போன்ற தொடர் அமையலாம், இதற்காக அவர் ஜான்சனைப் போன்ற மீசை வைத்திருக்கலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்