இளம் வயதில் 5 விக்கெட்டுகள்: வக்கார் யூனிஸ் சாதனையை முறியடித்த ஆப்கான் வீரர் முஜீப் ஸத்ரான்

By இரா.முத்துக்குமார்

ஒருநாள் போட்டியில் இளம் வயதில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ஸத்ரான், பாகிஸ்தான் வேகப்புயல் வக்கார் யூனிஸ் சாதனையை முறியடித்து அசத்தினார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறும் நடப்புத் தொரரில் முஜீப் ஸத்ரான் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இவர் 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆப்கான் அணி ஜிம்பாபவேயை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் வீழ்த்த முடியாத 3-1 என்ற முன்னிலை பெற்றது ஆப்கான்.

வக்கார் யூனிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை நிகழ்த்திய போது அவருக்கு வயது 18.

தற்போது அவரது சாதனையை முறியடித்த ஆப்கான் வீரர் முஜீப் ஸத்ரானுக்கு வயது 16தான். 2001, மார்ச்சில்தான் இவர் பிறந்தார்.

இவர் தவ்லத் ஸத்ரானுடன் புதிய பந்தை பகிர்ந்து கொண்டு சாலமன் மைர், பிறகு மசகாட்சா ஆகியோரை வீழ்த்தினார். லெக்ஸ்பின்னரான இவர் பிறகு கேப்டன் கிரீமர், கைல் ஜார்விஸ், முஸாரபனி, ஆகியோரையும் பெவிலியன் அனுப்பி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் ஜிம்பாபவே 134 ரன்களுக்குச் சுருண்டது.

135 ரன்கள் வெற்றி இலக்கை 21.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எடுத்து ஆப்கான் வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

40 mins ago

சுற்றுச்சூழல்

42 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்