ஐபிஎல் ஏலம் 2018:ஆப்கான் லெக் ஸ்பின்னர் ரஷீத் கானை மில்லியனராக்க நடந்த போட்டாப் போட்டி!

By இரா.முத்துக்குமார்

பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் 2018 தொடருக்கான ஏலத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த ஸ்பின்னராகக் கருதப்படும் ரஷீத் கானை ஏலம் எடுக்க கடும் போட்டா போட்டி நிலவியது.

சமீப காலங்களில் ஒருநாள் போட்டிகள், உலக டி20 லீகுகளில் கலக்கி வரும் ஆப்கானின் இளம் லெக் ஸ்பின்னர் ரஷீத் கானை எடுக்க சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரைட் டு மேட்ச் கார்டு இருந்தது. இவரது அடிப்படை விலை ரூ. 2 கோடி.

ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் ரூ.3 கோடிக்குக் கேட்டது. பிறகு போட்டி எகிறவே ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.3.8 கோடியாக உயர்த்தியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் உடனே ரூ.4 கோடிக்கு கேட்டது. ராயல்ஸ் நிறுத்திக் கொள்ள டெல்லி அணி ரூ.5 கோடி என்று ஏற்றியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.6.4 கோடியாக உயர்த்தியது.

ஆர்சிபி நுழைந்து ரூ.7.2 கோடி என்று ஏற்றியது. பிறகு ரூ.8 கோடிக்கு ஆர்சிபி உயர்த்தியது. பிறகு டெல்லி ரூ.8.6 கோடி என்று எகிற, ஆர்சிபி 8.8 கோடியாக்கியது.

இந்நிலையில் ரூ.9 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரைட் டு மேட்ச் கார்டைப் பயன்படுத்தி ரஷீத் கானை ஏலம் எடுக்க ஆப்கான் அணியின் மில்லியனரானார் ரஷீத் கான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்