டெஸ்ட் தரவரிசை: டாப்-10-லிருந்து வெளியே சென்றார் விராட் கோலி

By செய்திப்பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டீயில் மொத்தம் 9 ரன்களே எடுத்த விராட் கோலி ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 13வது இடத்திற்குச் சரிந்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் 38 மற்றும் 55 ரன்களை எடுத்த புஜாரா 8வது இடத்தில் உள்ளார்.

முதல் இன்னிங்சில் 152 ரன்களையும் பிறகு 2வது இன்னிங்சில் அரைசதம் கண்ட முரளி விஜய் 12 இடங்கள் முன்னேறி 30வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பந்து வீச்சில் இந்தியாவின் புவனேஷ் குமார் 27 இடங்கள் முன்னேறி 46வது இடத்திற்கு வந்துள்ளார். புவனேஷ் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக வீசி 82 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 8வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர் தரவரிசையில் 2வது இடத்தில் நிலையாக உள்ளார் அஸ்வின்.

பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து டிவிலியர்ஸ் முதலிடத்திலும் குமார் சங்கக்காரா 2வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சில் டேல் ஸ்டெய்ன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்