‘அவுட் ஆவார் போல் தெரியவில்லை’: ரோஹித் ட்வீட்டும், சச்சின் சாதனையை முறியடித்த ஸ்மித்தும்

By இரா.முத்துக்குமார்

பெர்த் டெஸ்ட் போட்டியில் 3-ம் நாளான இன்று தனது 22-வது டெஸ்ட் சதத்தை எடுத்ததில் ஸ்மித், மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.

அதாவது சச்சின் டெண்டுல்கர் 114 இன்னிங்ஸ்களில் 22 டெஸ்ட் சதங்களை எடுத்தார், ஸ்மித் 108-வது இன்னிங்ஸில் 22-வது சதத்தை எடுத்து முறியடித்தார்.

முதலிடத்தில் 58 இன்னிங்ஸ்களீல் 22 சதங்களை எடுத்த டான் பிராட்மேனும், 101 இன்னிங்ஸ்களில் எடுத்த சுனில் கவாஸ்கர் 2-ம் இடத்திலும் உள்ளனர்.

‘அருமையான பேட்ஸ்மெனின் அருமையான சதம் அனைவருக்கும் மேலான ஒரு கிளாசில் உள்ளார் ஸ்மித், ஒருவேளை விராட் கோலி இவருக்கு சவாலாக இருக்கலாம்’ என்று ஆஸி.வர்ணனையாளர்களில் ஒருவர் ஸ்மித்தின் இந்தச் சதம் குறித்து வர்ணித்தார்.

இந்திய அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மா தன் ட்வீட்டில் ஸ்மித் இன்னிங்ஸ் பற்றி குறிப்பிடும்போது, “என்ன மாதிரியான வீரர் ஸ்டீவ் ஸ்மித்!! அவுட் ஆவது போலவே தெரியவில்லையே. வெல் பிளேய்ட்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இன்று இந்த 3-வது வேக 22வது சதத்துடன் 2017-ல் 1,000 ரன்களையும் கடந்து விட்டார் ஸ்மித். இதனை தொடர்ந்து 4-வது ஆண்டாக செய்கிறார் ஸ்மித். இதற்கு முன்பாக இதனைச் செய்த ஒரே ஆஸி. வீரர் மேத்யூ ஹெய்டன் மட்டுமே.

பிரிஸ்பன் டெஸ்ட்டில் தனது மெதுவான சதத்தை எடுத்த ஸ்மித் இந்தச் சதத்தை 138 பந்துகளில் எடுத்து தன் டெஸ்ட் அதிவேக சத சாதனையையும் நிகழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்