இந்திய மண்ணில் 16 தொடர்களில் தோல்வியடையாத இந்திய அணி: கடந்த 25 மாத கிரிக்கெட் மறுபார்வை!

By ஜி.விஸ்வநாத்

கடந்த 25 மாதங்களில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து இந்திய அணி 16 தொடர்களில் தோல்வியடையாமல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

2015-ம் ஆண்டு வான்கடே மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை 3-2 என்று வென்ற பிறகு இந்திய அணிக்கு தோல்வியே ஏற்படவில்லை.

இதில் 15 தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 6 டெஸ்ட் தொடர்கள், 5 ஒருநாள் தொடர், 4 டி20 தொடர் இந்த வெற்றியில் அடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரேயொரு டி20 தொடரில் 3-வது போட்டி ஹைதராபாத்தில் மழை காரணமாக கைவிடப்பட்டதால் தொடர் சமன் ஆனது, ஆக மொத்தம் 16 தொடர்களில் இந்திய அணியை வீழ்த்த முடியவில்லை.

2 ஆண்டுகளுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா வான்கடே மைதானத்தில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 438 ரன்கள் விளாசியது, ஓய்வறையின் முன்பு அணி இயக்குநர் ரவி சாஸ்திரி, பிட்ச் பராமரிப்பாளர் சுதிர் நாயக்கை அனைவர் முன்னிலையிலும் கடிந்து கொண்டார்.

அந்தப் போட்டியில் குவிண்டன் டி காக் 109 ரன்களையும், டுபிளெசிஸ் 133 ரன்களையும், ஏ.பி.டிவிலியர்ஸ் 119 ரன்களையும் விளாசினார். ஓவருக்கு 8.76 ரன்கள் விகிதத்தில் விளாசல். பதிலுக்கு இந்தியா 35.5 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

ஆனால் ஐசிசியின் எதிர்காலப் பயணத்திட்டம் (எப்டிபி) இந்திய அணிக்குச் சாதகமாக அமைக்கப்பட்டதும் உண்மையே. விராட் கோலி தலைமை இந்திய அணி ஒரு பெரிய பிராண்டாக கட்டமைக்கப்பட வேண்டியதற்காக உள்நாட்டு தொடர்களில் 2 ஆண்டுகள் இந்தியா விளையாடியது. வேறு எந்த அணிக்காவது இந்த சிறப்புரிமை உண்டா என்பது ஐசிசி-யை நோக்கி எழுப்பப் படவேண்டிய கேள்வி, பாகிஸ்தான் உள்ளிட்ட வாரியங்கள் இதனை கேள்வி கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என்று இந்தியா வெற்றி பெற்றது, அனைத்துமே குழி பிட்ச்தான் எனும் போது நாக்பூர் பிட்சை மட்டும் ஐசிசி ஒரு பெயருக்காக ‘மோசமான பிட்ச்’ என்று முத்திரை குத்தியது. டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிந்தது அஸ்வின் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய ஸ்பின் இரட்டையர்கள் அஸ்வின், ஜடேஜா விக்கெட்டுகளில் கொழுத்தனர். 20 டெஸ்ட்களில் அஸ்வின் 125 விக்கெட்டுகளையும் 104 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தென் ஆப்பிரிக்காவுடன் புதுடெல்லியில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து தொடங்கி இந்திய அணி மொத்தம் இந்த தொடர் சீசனில் 361 வீரர்களை வீழ்த்தியது.

அஸ்வின், ஜடேஜாவுக்குப் பிறகு உமேஷ் யாதவ் 40 விக்கெட்டுகள், ஷமி 27 விக்கெட், புவனேஷ்வர் குமார், இசாந்த் சர்மா தலா 18 விக்கெட்டுகள், அமித் மிஸ்ரா 12, ஜெயந்த் யாதவ் 11, குல்தீப் யாதவ் 4, வருண் ஆரோன் 2.

பேட்டிங்கில் 20 டெஸ்ட்களில் விராட் கோலி 2,062 ரன்களுடன் முன்னிலை வகித்தார். சராசரி 71.10. 7 சதங்கள், 4 அரைசதங்கள்.

செடேஸ்வர் புஜாரா 1,807 ரன்களை 56.40 என்ற சராசரியில் 5 சதங்கள் 10 அரைசதங்களுடன் எடுத்தார். முரளி விஜய் 18 டெஸ்ட் போட்டிகளில் 1,273 ரன்களை 42.23 என்ற சராசரியில் 5 சதங்கள் 4 அரைசதங்களுடன் எடுத்தார். ரஹானே 18 டெஸ்ட் போட்டிகளில் 1001 ரன்களை 3 சதம், 3 அரைசதங்களுடன் எடுத்தார். லோகேஷ் ராகுல் 11 டெஸ்ட்களில் 794 ரன்களை ஒரு சதம் மற்றும் 7 அரைசதங்களுடன் எடுத்தார்.

20 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் புனேயில் தோல்வி அடைந்தது இந்திய அணி. ஸ்டீவ் ஓகீஃப் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதில் ஆஸ்திரேலியா 333 ரன்களில் வென்றது. இதே காலக்கட்டத்தில் இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் தோல்வி தழுவியது. அதாவது நியூசிலாந்திடம் 3, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளிடம் தலா ஒரு தோல்வி. 4 டி20 தோல்விகள் இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராஅக் வந்தது.

ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலி இந்த சீசனில் 16 போட்டிகளில் 986 ரன்களை 70.34 என்ற சராசரியில் எடுத்து முதலிடம் வகிக்கிறார். இதில் 4 சதம், 4 அரைசதம். இவருக்கு அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா 16 போட்டிகளில் 810 ரன்கள் 3 சதம், 3 அரைசதம், அடுத்ததாக தோனி 19 போட்டிகளில் 597 ரன்கள் ஒரு சதம், 3 அரைசதம். கேதார் ஜாதவ் 16 போட்டிகளில் 490 ரன்கள் சராசரி 44.55 ஒரு சதம், 2 அரைசதம். ஹர்திக் பாண்டியா 18 போட்டிகளில் 454 ரன்கள், 3 அரைசதம். ரஹானே 11 போட்டிகளில் 388 ரன்கள் 5 அரைசதம்.

ஒருநாள் போட்டிகளில் ஜஸ்பிரீத் பும்ரா 26 விக்கெட்டுகளுடன் முதலிடம் வகிக்கிறார். பாண்டியா 21, சாஹல் 16, அமித் மிஸ்ரா 15, புவனேஷ்வர் குமார் 14, உமேஷ் யாதவ் 13, குல்தீப் யாதவ் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

டி20 போட்டியிலும் விராட் கோலி 13 போட்டிகளில் 450 ரன்களுடன் முதலிடம் வகிக்கிறார். ரோஹித் சர்மா 16 போட்டிகளில் 418 ரன்கள், தோனி 19 போட்டிகளில் 349, ராகுல் 6 போட்டிகளில் 255, ஷிகர் தவண் 12 போட்டிகளில் 253.

டி20-யில் சாஹல் 10 போட்டிகளில் 20 விக்கெட்டுகளுடன் முன்னிலை வகிக்கிறார். பும்ரா 18 விக்கெட்டுகளையும், பாண்டியா 13 விக்கெட்டுகளையும் நெஹ்ரா, 13 விக்கெட்டுகளயும், அஸ்வின் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

மூலம்: தி இந்து ஆங்கிலம்

தமிழ் வடிவம் : ஆர்.முத்துக்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

55 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்