எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி: கர்நாடகா - ரயில்வே அணிகள் இறுதிப் போட்டியில் இன்று மோதல்

By செய்திப்பிரிவு

சென்னை: எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடரில் கர்நாடகா - ரயில்வே அணிகள் இறுதிப் போட்டியில் இன்று மோதுகின்றன.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (ஆர்எஸ்பிபி) - பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் மோதின. இதில் ஆர்எஸ்பிபி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆர்எஸ்பிபி அணி சார்பில் பிரதாப் லக்ரா (3-வது நிமிடம்), அனுக்ரஹ் குஜூர் (10-வது நிமிடம்), அர்ஜுன் சர்மா (55-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

2-வது அரை இறுதி ஆட்டத்தில் ஹாக்கி கர்நாடகா - இந்திய ராணுவம் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் கர்நாடகா அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று மாலை 6.15 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் கர்நாடகா - ரயில்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்