வலுவான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு: அணியில் டுபிளெசிஸ், டேல் ஸ்டெய்ன்

By இரா.முத்துக்குமார்

இந்தியாவுக்கு எதிராக ஜனவரி 5-ம் தேதி நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் கேப்டன் டுபிளெசிஸ் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு வலுவான அணிக்குத் திரும்பியுள்ளனர்.

செவ்வாயன்று கேப்டவுனிற்கு வரும் தென் ஆப்பிரிக்க அணியில் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸும் இடம்பெற்றுள்ளார். காயமடைந்த குவிண்டன் டி காக் இந்திய டெஸ்ட் போட்டிக்குள் குணமடைந்து விடுவார் என்றபடியால் அவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேகிஸோ ரபாடா, மோர்னி மோர்கெல், வெர்னன் பிலாண்டர், டேல் ஸ்டெய்ன் ஆகிய அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி வருமாறு:

டுபிளெசிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, தெம்பா பவுமா, குவிண்டன் டி காக், தியூனிஸ் டி புருய்ன், ஏ.பி.டிவில்லியர்ஸ், டீன் எல்கர், கேஷவ் மகராஜ், ஐடன் மர்க்கரம், மோர்னி மோர்கெல், கிறிஸ் மோரிஸ், ஆண்டில் பெலுக்வயோ, பிலாண்டர், ரபாடா, டேல் ஸ்டெய்ன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

45 mins ago

வணிகம்

59 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

4 hours ago

மேலும்