ட்விட்டரிலும் மோதல்: மிட்செல் ஜான்சனை ‘ப்ளாக்’ செய்த கெவின் பீட்டர்சன்

By இரா.முத்துக்குமார்

களத்தில் தங்களிடையே பல மோதல்களைக் கண்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ஆகியோருக்கிடையே ட்விட்டரிலும் மோதல் தொடர்கிறது.

2014 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 5-0 என்று தோல்வி தழுவியதையடுத்து பலரது கிரிக்கெட் வாழ்க்கை இங்கிலாந்து அணியில் முடிவுக்கு வந்தது, அதில் குறிப்பிடத்தகுந்தவர் கெவின் பீட்டர்சன்.

இந்நிலையில் கெவின் பீட்டர்சன், மைக்கேல் வான் ஆகியோர் நடப்பு ஆஷஸ் தொடரில் வர்ணனை செய்து வருகின்றனர். அவர்கள் வர்ணனையை கேலி செய்யும் விதமாக மிட்செல் ஜான்சன் தன் ட்விட்டரில், “உங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் 140கிமீ வேகம் வீசுவதாகப் பேசிக்கொண்டிருந்தீர்கள். 2-வது புதிய பந்து எடுத்தது முதலே மித வேகப்பந்து வீச்சுதான் வீசினர். உங்கள் பவுலர்கள் 4 பேர் உள்ளனர், கொஞ்சம் முதுகை வளைத்து வீசலாமே, அதற்கு அனுமதி உண்டு” என்று கேலி செய்திருந்தார்.

இதற்கு இங்கிலாந்து ரசிகர்களிடமிருந்து சரமாரி திட்டு வாங்கினார் மிட்செல் ஜான்சன். இதனிடையே மிட்செல் ஜான்சனுக்கு கெவின் பீட்டர்சன் ட்வீட் செய்த போது, “மிட்செல் நீங்களா அல்லது உங்கள் நிர்வாகம் ட்வீட் பதிவிடுகிறதா? நீங்களாக இருந்தால் உங்களுக்கு நீங்களே நல்லது செய்துகொள்ளவில்லை. அல்லது உங்கள் நிர்வாகம் இதனைச் செய்தால் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள் அல்லது அவர்களை பணிநீக்கம் செய்யுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால் ஜான்சனும் விடாமல் தனது கிண்டலை செய்து கொண்டிருந்தார், இந்நிலையில் கெவின் பீட்டர்சன் ஜான்சனை பிளாக் செய்தார். தன்னை பிளாக் செய்ததை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மிட்செல் ஜான்சன் வெளியிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்