ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்: விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு - முதலிடத்தை இழந்தது நியூஸிலாந்து அணி

By பிடிஐ

டி20 போட்டி பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 104 ரன்கள் சேர்த்த விராட் கோலி கூடுதலாக 13 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இதன் மூலம் 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச்-க்கு (784) இடையிலான தூரத்தை அதிகப்படுத்திக் கொண்டுள்ளார். இருவருக்கும் இடையே 40 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. நியூஸிலாந்து தொடரில் 93 ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தையும், 87 ரன்கள் சேர்த்த ஷிகர் தவண் 20 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ராஜ்கோட் போட்டியில் 109 ரன்கள் விளாசிய நியூஸிலாந்து தொடக்க வீரர் காலின் மன்ரோ 4 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை அடைந்துள்ளார்.

பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார் இரு இடங்கள் முன்னேறி 26-வது இடத்தையும், யுவேந்திரா சாஹல் 22 இடங்கள் முன்னேறி 30-வது இடத்தையும், அக்சர் படேல் 17 இடங்கள் முன்னேறி 62-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா 724 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் 5 விக்கெட்கள் வீழ்த்திய நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி 5 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தையும், 6 விக்கெட்கள் வீழ்த்திய டிரென்ட் போல்ட் 14 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்ற போதிலும் அணிகள் தரவரிசையில் 119 புள்ளிகளுடன் 5-வது இடத்திலேயே தொடர்கிறது. அதேவேளையில் நியூஸிலாந்து அணி 120 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்