இளையோர் வில்வித்தை | தங்கம் வென்றார் இந்தியாவின் பிரியன்ஷ்

By செய்திப்பிரிவு

லிமெரிக்: இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பிரியன்ஸ் தங்கப் பதக்கம் வென்றார்.

அயர்லாந்தின் லிமெரிக் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவருக்கான 21 வயதுக்கு உட்பட்டோருக்கான காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் பிரியன்ஷ் இறுதி சுற்றில் சுலோவேனியாவின் அல்ஜாஸ் பிரெங்குடன் மோதினார். இதில் பிரியன்ஷ் 147-141 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக 18 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் காம்பவுண்ட் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் அதிதி தங்கம் வென்றார். இறுதி சுற்றில் அவர், 142-136 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின் லீன் டிரேக்கை வீழ்த்தினார். இந்த தொடரில் இதுவரை இந்தியா 5 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்கள் வென்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

சினிமா

10 hours ago

மேலும்