எங்களுக்கு டக்வொர்த் முறை உண்மையில் புரியவில்லை: விராட் கோலி

By இரா.முத்துக்குமார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக்வொர்த் கணக்கீட்டு முறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எடுத்து வெற்றி பெற்றதையடுத்து ‘உள்ளபடியே டக்வொர்த் முறை எங்களுக்குப் புரியவில்லை’ என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்த டி20 வெற்றி இந்திய அணியின் 50வது டி20 வெற்றி, இந்தச் சாதனையை நிகழ்த்தும் 3-வது அணியாகும் இந்திய அணி.

ஆட்ட முடிந்த பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவர் கூறும்போது,

“டாஸ் வென்று பவுலிங் எடுத்த பிறகு இத்தகைய ஒரு முயற்சி தேவைப்படுகிறது. டக்வொர்த் லூயிஸ் முறையைப் பற்றி உள்ளபடியே எங்களுக்குப் புரியவில்லை என்றே கூற வேண்டும். 40 ரன்கள் இலக்காக இருக்கும் என்று நினைத்தோம், 48 என்பது கொஞ்சம் ‘ட்ரிக்கி’ இலக்குதான். வீரர்களின் ஒருங்கிணைந்த முயற்சியாகும் இது. அதே போல் நிர்வாகத்தையும் குறிப்பிட வேண்டும். அந்தந்த வடிவங்களுக்கு ஏற்ற சிறப்பு வீரர்களைத் தேர்வு செய்தனர். புதிர் வீச்சாளர்களைத் தேர்வு செய்த்து பாராட்டுக்குரியது.

இத்தகைய புதிர் வீச்சாளர்கள் ஒரு போட்டியில் ரன்களைக் கொடுப்பார்கள், ஆனால் மீண்டெழுந்து சாதிப்பார்கள். குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் புவனேஷ், பும்ரா இப்போதெல்லாம் மிகவும் சிறப்பாக வீசி வருகின்றனர். யார்க்கர்கள், ஸ்லோ பந்துகளை வீச சிறப்புத் திறமையும் தன்னம்பிக்கையும் வேண்டும்.

ஒருநாள் தொடரை தவண் இழந்தது துரதிர்ஷ்டமே, ஆனால் இந்த 15 ரன்கள் கூட அவருக்குத் தன்னம்பிக்கை அளிக்கும்” என்றார் விராட் கோலி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

ஜோதிடம்

53 mins ago

ஜோதிடம்

59 mins ago

இந்தியா

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்