4-வது இடத்தில் இந்தியா நீடிப்பு

By செய்திப்பிரிவு

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 4-வது இடத்தில் நீடிக்கிறது.

முதல் முறையாக இந்திய மகளிர் அணி ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் 116 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பெற்றுள்ளது. நியூஸிலாந்து 118-வது புள்ளிகளுடன் 3-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியை கீழே தள்ளி இங்கிலாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இரு அணிகளும் தலா 128 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும் தசம வித்தியாசத்தில் இங்கிலாந்து முதலிடம் பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் 101 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 93 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், பாகிஸ்தான் 72 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளன. இலங்கை அணி கடைசி இடம் வகிக்கிறது.

இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கூறும்போது,“தரவரிசையில் நியூஸிலாந்தை நெருங்கி உள்ளோம். 3-வது இடத்தை பிடிப்பதே எங்களது இலக்கு” என்றார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்