WTC Final | ஆஸி. கடந்து வந்த பாதை

By செய்திப்பிரிவு

லண்டன்: இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்த இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி கடந்த பாதை குறித்து பார்ப்போம்.

ஆஷஸ் ஆதிக்கம்

2021-2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் கைப்பற்றியது. 5 போட்டிகள் இந்த தொடரில் 4-வது டெஸ்ட் டிராவில் முடிவடைந்திருந்தது.

பாகிஸ்தானில் அசத்தல்

2022 மார்ச்சில் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. முதல் இரு போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 1998ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பாகிஸ்தானில் தொடரை வென்றது.

இலங்கையில் சமன்

2022-ம் ஆண்டு ஜூன், ஜூலையில் இலங்கை மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது.

ஒயிட்வாஷ்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான உள்நாட்டு தொடரை 2-0 என முழுமையாக வென்றது.

தெ.ஆ.வை சாய்த்தது

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது. கடைசி ஆட்டம் டிராவில் முடிவடைந்திருந்தது.

போராட்டம்

இந்த ஆண்டு பிப்ரவரி-மார்ச்சில் இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் வெற்றி கண்டதால் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடைசி ஆட்டம் டிரா ஆனது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்