அரச முத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு  

By கல்யாணசுந்தரம்

திருச்சி திருவானைக்காவல் வடக்கு 5-ம் பிரகாரப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அரச முத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவையொட்டி கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பிப்.19-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மாலையில் வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

பிப்.20-ம் தேதி காலை காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, மாலையில் முதல் கால யாகபூஜை நடைபெற்றது. பிப்.21-ம் தேதி காலை இரண்டாம் கால யாகபூஜை, மாலையில் மூன்றாம் கால யாக பூஜை ஆகியவை நடைபெற்றன.

குடமுழுக்கு தினமான இன்று (பிப். 22) காலை நான்காம் கால யாகபூஜைகள் நடைபெற்று, யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு, காலை 9.30 மணிக்கு அரசு முத்து மாரியம்மன் விமானம் மற்றும் செல்வவிநாயகர், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளின் சன்னதிகளிலும் குடமுழுக்கு நடைபெற்றது.

ஆஞ்சநேயர் சன்னதி கோபுர மஹா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தர்களில் ஒருபகுதியினர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, விழாக்குழுவைச் சேர்ந்த நாகராஜன், நாகு, செந்தில்நாதன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 mins ago

ஜோதிடம்

19 mins ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்