வார ராசிபலன் 01-10-2015 முதல் 07-10-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 11-ல் செவ்வாயும் புதனும் குருவும் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் வாழ்வில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் கூடிவரும். நண்பர்கள், உறவினர்கள், கூட்டாளிகள் ஆகியோரால் நலம் உண்டாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். உடல்நலம் சீராகும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் வாழ்க்கைத் துணைவராலும் நலம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். ஊக வணிகத் துறைகள் லாபம் தரும். பிரச்சினைகள் எளிதில் தீரும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்கும். 4-ம் தேதி முதல் தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 4, 7.

திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 5, 6, 7, 9.

பரிகாரம்:

சூரியனுக்கும் ராகுவுக்கும் பரிகாரங்களைச் செய்யவும். பார்வையில்லாதவர்களுக்கு உதவி செய்யவும்.

விருச்சிக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ல் புதன், குரு, சுக்கிரன் ஆகியோருடன் கூடி இருப்பது விசேடமாகும். சூரியன், ராகு ஆகியோர் 11-ல் உலவுவதும் சிறப்பாகும். எதிர்ப்புக்கள் விலகும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்பு கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். மாணவர்களது நிலை உயரும். சொத்துக்களால் வருவாய் கிடைத்துவரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகள் ஆக்கம் தரும். 4-ம் தேதி முதல் புதன் 11-ம் இடத்திற்கு மாறுவதால் சொந்தத் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 7.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்சாம்பல் நிறம், பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 5, 6, 9.

பரிகாரம்:

சனிக்கும் கேதுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்துவருவது நல்லது. ஆஞ்சநேயரையும் விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே!

உங்கள் ராசி அதிபதி குரு 9-ல் வலுத்திருக்கிறார். குரு உங்கள் ஜன்ம ராசியையும் 3, 5-ஆம் இடங்களையும் பார்ப்பதும் விசேடமாகும். சூரியன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் உற்சாகம் பெருகும். மக்களால் பாக்கியம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் சிலருக்குக் கூடிவரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் பெருகும். எதிரிகள் அடங்குவார்கள். மாதர்களது நிலை உயரும். தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். சாதுக்கள், மகான்கள், சித்தர்கள் ஆகியோரது தரிசனம் கிடைக்கும். 4-ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு வெளிச்சமான பாதை தெரியவரும். மாணவர்களது நிலை உயரும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுகூலம் உண்டு. தாய் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 4.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம். வெண்மை, இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.

lபரிகாரம்:

சனிக்கும் கேதுவுக்கும் அர்ச்சனைகளைச் செய்யவும். கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவிசெய்யுங்கள்.

மகர ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 8-ல் புதனும் சுக்கிரனும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. செல்வாக்கும் மதிப்பும் உயரும். பொருளாதார நிலையில் சீரான வளர்ச்சி காண வழி பிறக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி புரிவார்கள். கலைத்துறை ஊக்கம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில நிறைவேறும். பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருட்கள் லாபம் தரும். விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். 4-ம் தேதி முதல் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். குருவும் செவ்வாயும் 8-ல் இருப்பதால் பொருளாதாரக் காரியங்களில் விழிப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 4, 7.

திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பச்சை, நீலம், மெரூன்.

எண்கள்: 5, 6, 7, 8.

பரிகாரம்:

முருகனை வழிபடவும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி நல்வாழ்த்துக்களைப் பெறவும்.

கும்ப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். உழைப்புக்குரிய பயன் கிடைக்கவே செய்யும். நல்லவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பண நடமாட்டம் அதிகமாகும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். 2-ல் கேதுவும், 8-ல் சூரியனும் ராகுவும் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். 4-ம் தேதி முதல் புதன் 8-ம் இடத்திற்கு மாறி வலுப்பெறுவதால் சொந்தத் தொழில் விருத்தி அடையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 4, 7.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 8.

பரிகாரம்:

நாகர் வழிபாடு செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும். தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவி செய்வது நல்லது.

மீன ராசி வாசகர்களே!

உங்கள் ஜன்ம ராசிக்கு 6-ல் செவ்வாய் உலவுவது விசேஷமாகும். புதனுடைய சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் அறிவாற்றலும் செயல்திறமையும் வெளிப்படும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். துணிச்சல் அதிகரிக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உடல் நலம் சீராகும். கடன் தொல்லை சற்று குறையும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். கோபம் அதிகம் வரும். அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. பிறரிடம் சுமுகமாகப் பழகவும். 4-ம் தேதி முதல் எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற துறைகள் லாபம் தரும். தொழில்நுட்பத் திறமை கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 4, 7.

திசைகள்: தெற்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, பச்சை

எண்கள்: 5, 9

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் பசு நெய் தீபமேற்றி, அர்ச்சனை செய்வது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

6 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்