சனி மகா பிரதோஷத்தில்... லிங்காஷ்டகம்! 

By செய்திப்பிரிவு


சனி மகா பிரதோஷ நன்னாளில், வீட்டில் விளக்கேற்றி, லிங்காஷ்டகம் பாராயணம் செய்யுங்கள். சகல பாவங்களும் தொலையும். புண்ணியங்கள் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.
பிரதோஷ நாளில் சிவாலயம் செல்வதும் சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேகங்களில் கலந்துகொண்டு வேண்டிக் கொள்வதும் மிகுந்த பலனைத் தந்தருளும்.

அமாவாசைக்கு முந்தைய இரண்டாம் நாளும் பெளர்ணமிக்கு முந்தைய இரண்டாம்நாளும் பிரதோஷம் எனும் முக்கியமானதொரு நிகழ்வு வரும். திரயோதசி திதியன்று வருகிற இந்தப் பிரதோஷநாளில், பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம்.

இன்று பிரதோஷம். பங்குனி மாதப் பிரதோஷம். அதிலும் சனிக்கிழமையன்று வருகிறது.
சனிப் பிரதோஷத்தை மகா பிரதோஷம் என்பார்கள். சனி பிரதோஷ தரிசனம் சர்வ பாப விமோசனம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவனாருக்கும் நந்திதேவருக்கும் அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். வில்வமும் செவ்வரளியும் வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்துங்கள். உங்கள் கடன் பிரச்சினைகள் யாவும் தீர்ந்துவிடும். மனதில் இருந்து வந்த பயமும் குழப்பமும் நீங்கி, தெளிவுடன் திகழ்வீர்கள்.
இன்று சனி மகா பிரதோஷம். இந்தநாளில், வீட்டிலிருந்தே சிவ வழிபாடு செய்யுங்கள். பசுக்களுக்கு அகத்திக்கீரையும் உணவும் வழங்குங்கள். லிங்காஷ்டகம் பாராயணம் செய்யுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

11 mins ago

வலைஞர் பக்கம்

51 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்