கார்த்திகை சங்கடஹர சதுர்த்தி; நம் கஷ்டமெல்லாம் தீர்ப்பார் கணபதி! 

By செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


சங்கடஹர சதுர்த்தி நன்னாள் இன்று (15.12.19) ஞாயிற்றுக்கிழமை நாளில், விநாயகரை மனதார வணங்குவோம். கஷ்ட நஷ்டங்களைப் போக்கி அருள்வார் ஆனைமுகத்தான். மறக்காமல் விநாயகரை வழிபடுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருள்வார் வேழமுகத்தான்.

முருகனுக்கு கந்த சஷ்டி மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் வரும் சஷ்டியும் விரதமிருந்து அனுஷ்டிக்கப்படுகிறது. சிவனாருக்கு மாசியில் மகாசிவராத்திரி என்று கோலாகலமாக பூஜைகள் நடப்பது தெரியும்தானே. அதேநேரம், மாதந்தோறும் வருகிற சிவராத்திரியிலும் விரதம் இருப்பார்கள் பக்தர்கள்.

மார்கழியின் வைகுண்ட ஏகாதசி பிரசித்தம். ஆனாலும் மாதந்தோறும் வருகிற ஏகாதசி திதியின் போது விரதமிருந்து, பெருமாளை ஸேவிப்பார்கள் பக்தர்கள்.

அதேபோல், விநாயக சதுர்த்தியின் போது, நாடு முழுவதும் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு இருக்கும். மண் பிள்ளையாரை வாங்கிச் சென்று, பூஜித்து, பிறகு மண் பிள்ளையார விசர்ஜனம் செய்வார்கள். ஆனாலும் மாதந்தோறும் வருகிற சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், விநாயகரைத் தரிசிப்பதும் அவருக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

இன்று 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சங்கடஹர சதுர்த்தி. இந்த நாளில், அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் செல்லுங்கள். அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். விநாயகருக்கு வஸ்திரமும் அருகம்புல் மாலையும் வெள்ளெருக்கு மாலையும் சார்த்தி, பிரார்த்தனை செய்யுங்கள்.

மிகவும் சாந்நித்தியம் நிறைந்த கார்த்திகை மாதசங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகப் பெருமானைத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். , கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாது போகும். வாழ்வில் எல்லா வளமும் இல்லம் தேடி வரும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

19 mins ago

விளையாட்டு

27 mins ago

தமிழகம்

42 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சுற்றுலா

30 mins ago

தொழில்நுட்பம்

21 mins ago

மேலும்