நின்றகோலத்தில் 3-ம் நாள்: இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் அத்திவரதர்; திருக்கல்யாணத்தை முன்னிட்டு 3 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைப வத்தில் இளஞ்சிவப்பு நிறப் பட் டாடை அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு நேற்று காட்சி அளித்தார். அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் வரிசையில் செல் லும்போது நெரிசல் ஏற்படாமல் இருக்க காத்திருக்கும் இடம் வழி யாக தேக்கி வைத்து பின்னர் அனுப்பப்பட்டனர்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெரு மாள் கோயிலில் நடைபெற்றுவரும் அத்திவரதர் வைபவத்தில் ஜூலை 1 முதல் சயன கோலத்தில் இருந்த அத்திவரதர், ஆக.1 முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். நின்ற கோலத் தின் 3-ம் நாளான நேற்று இளஞ்சிவப்பு நிறப் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று, பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

20 ஆயிரம் பேர் காத்திருக்கலாம்

பக்தர்கள் அதிக அளவில் வந்தால் நெரிசல் ஏற்படாமல் இருக்க அண்ணா அவென்யூ, வாழைத்தோப்பு பகுதிகளில் பக்தர்கள் காத்திருக்கும் இடங் கள் அமைக்கப்பட்டன. சுமார் 20 ஆயிரம் பேர் வரை இந்த இடத்தில் காத்திருக்கலாம்.

நேற்று இந்த இடத்தில் பக்தர் களை காத்திருக்க வைத்து, பின்னர் தரிசனத்துக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் பொது தரிசனத்தில் பக்தர்கள் 5 மணி நேரம் வரை காத்தி ருந்து அத்திவரதரை தரிசிக்க வேண்டியிருந்தது. முக்கிய பிரமுகர்கள் வரிசையில் காலை யில் ஒன்றரை மணி நேரமும், அதன் பின்னர் 2 மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மிக முக்கிய பிரமுகர்கள் வழியில் அனுமதி அட்டை இல்லாத நூற்றுக் கணக்கானோரை போலீ ஸார் அனுமதித்ததால் அந்த வரி சையிலும் கூட்ட நெரிசல் ஏற்பட் டது.

வழியில் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது. நகரத்தில் பல இடங் களில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. ஏராளமான வாக னங்கள் ஓரிக்கை தற்காலிக பேருந்து நிலையம் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டன.

ஆண்டாள் கல்யாண வைபவத் துக்காக கிழக்கு கோபுர வாசல் மதியம் 2 மணிக்கு மூடப்பட் டது. உள்ளே இருந்த பக்தர்கள் 5 மணி வரை அத்திவரதரை தரி சிக்க அனுமதிக்கப்பட்டனர் முக்கிய பிரமுகர்கள், மிக முக்கிய பிரமுகர் கள் செல்லும் வரிசையும் 2 மணிக்கு மூடப்படும் என்று அறிவித்திருந் தும், 4 மணியை கடந்தும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

முதியோர் வரிசையில் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. முதியோருடன் செல்ல துணைக்கு ஒரு நபரும் அனு மதிக்கப்பட்டார். முக்கிய பிரமுகர் கள் வரிசையைவிட இந்த வரிசை யில் செல்பவர்களால் எளிதில் அத்திவரதரை தரிசிக்க முடிந்தது. இந்நிலையில் பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி நேற்று அத்திவரதரை தரிசனம் செய்தார். முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உடன் வந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

33 mins ago

வாழ்வியல்

43 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்