வார ராசி பலன் 16-04-2015 முதல் 22-04-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு ஆறில் கேதுவும் எட்டில் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் மனத்தில் துணிவு பிறக்கும். எடுத்த காரியங்களில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சுபிட்சம் கூடும். நண்பர்களும் உறவினர்களும் அளவோடு உதவுவார்கள். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். வாழ்க்கைத் துணைவராலும் கூட்டாளிகளாலும் சில இடர்ப்பாடுகள் ஏற்படும் என்றாலும் சமாளிப்பீர்கள்.

பிறரிடம் கோபப்படாமல் அன்புடன் பழகுவது நல்லது. வீண்வம்பு கூடாது. பயணத்தின்போது விழிப்புத் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உள்ளவர்கள் தெளிவான பாதையைக் காண்பார்கள். குடும்ப நலம் கவனிப்பின்பேரில் சீராக இருந்துவரும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 17, 22 (முற்பகல்).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை.

எண்கள்: 6, 7.

பரிகாரம்:

துர்கைக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும்.

விருச்சிக ராசி வாசகர்களே!

உங்கள் ராசியாதிபதி செவ்வாய், ஆறில் உலவுவது சிறப்பாகும். சூரியன், புதன், குரு, ராகு ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். மக்கள் நலம் சீராகும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், நிர்வாகத் துறையினருக்குச் செழிப்பான சூழ்நிலை உண்டு. வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வப் பணிகள் நிறைவேறும். வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்புகள் கூடிவரும். வேலைப்பளு கூடவே செய்யும். அலைச்சலும் அதிகமாகும். எனினும் உரிய பலன் கிடைத்துவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 17, 22.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தெற்கு,வடக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், சிவப்பு, பச்சை.

எண்கள்: 1, 3, 4, 5, 9.

பரிகாரம்:

விநாயகரை வழிபட்ட பின்பு எதிலும் ஈடுபடுவது நல்லது. சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு ஐந்தில் சூரியனும் செவ்வாயும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். நல்ல தகவல் வந்து சேரும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். அரசுப் பணியாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். தந்தையாலும் உடன்பிறந்தவர்களாலும் நலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

தாய் நலனில் அக்கறை தேவைப்படும். கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்கள் நிகழ இன்னும் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டிவரும். பொருள்கள் கொடுக்கல்-வாங்கல், சொத்து விஷயங்களில் விழிப்புத் தேவை. புதிய ஒப்பந்தங்கள் வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தேதி: ஏப். 22.

திசைகள்: தென்மேற்கு, தெற்கு, கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, புகை நிறம். ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 9.

பரிகாரம்:

சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி செய்யவும். விநாயகரையும், ஆஞ்சநேயரையும் தொடர்ந்து வழிபடவும்.

மகர ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றில் கேதுவும், நான்கில் புதனும் ஐந்தில் சுக்கிரனும் ஏழில் குருவும், 11-ல் சனியும் உலவுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். மன உற்சாகம் பெருகும். நல்ல தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண வழிபிறக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். கலைத் துறையினருக்கு சுபிட்சம் கூடும்.

மாதர்களது நோக்கம் நிறைவேறும். சுப காரியங்கள் நிகழும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கலில் லாபம் உண்டு. பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு அதிகமாகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பலன் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகமாகும். வாரக் கடைசியில் ஓர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 17, 22.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, மெரூன், பச்சை.

எண்கள்: 3, 5, 6, 7, 8.

பரிகாரம்: சூரிய வழிபாடு நலம் தரும். ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.

கும்ப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றில் சூரியனும் செவ்வாயும், நான்கில் சுக்கிரனும், 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் விலகிப் போவார்கள். போட்டிகள், பந்தயங்கள், விளையாட்டு, வழக்குகளில் வெற்றி காணச் சந்தர்ப்பம் உருவாகும். உடன்பிறந்தவர்களாலும், தந்தையாலும் அனுகூலம் உண்டாகும்.

இயந்திரப் பணிகள் லாபம் தரும். சொத்துகள் சேரும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். காடு, மலை சார்ந்த தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். நிர்வாகத் திறமை பளிச்சிடும். கேளிக்கை்களில் ஈடுபாடு கூடும். சுகானுபவம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரால் நலம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. பொருளாதார விஷயங்களில் விழிப்புடன் ஈடுபடவும். உணவில் கட்டுப்பாடு தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 17, 22.

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், சிவப்பு, ஆரஞ்சு.

எண்கள்: 1, 6, 8, 9.

பரிகாரம்:

நாகரை வழிபடவும். திருமாலுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது. ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவ.

மீன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டில் செவ்வாயும் புதனும் மூன்றில் சுக்கிரனும், ஐந்தில் குருவும் உலவுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொறியியல் துறை லாபம் தரும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். தம்பதியினருக்குள் பரஸ்பர நலம் பரிமாறப்படும்.

மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். பண நடமாட்டம் அதிகரிக்கும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு வாரப் பின்பகுதியில் வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். பெண்களின் எண்ணம் நிறைவேறும். மாணவர்களது நிலை உயரும். பேச்சில் சூடு வேண்டாம். அன்புடன் பேசிப் பழகினால் நலம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 17, 22.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: இளநீலம், சிவப்பு, பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 9.

பரிகாரம்:

சூரியன், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்