வார ராசிபலன் 08-01-2015 முதல் 14-01-2015 வரை மேஷம் முதல் கன்னி வரை

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் 11-ம் இடத்தில் உலவுவது விசேடமாகும். புதன், ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். மன மகிழ்ச்சி பெருகும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மக்களால் அனுகூலம் உண்டாகும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள்.

உடன்பிறந்தவர்களால் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். பயணத்தால் நலம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும். பொறியியல், சட்டம், காவல், இராணுவத் துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனைகள் புரிவார்கள். எழுத்துத் துறையினர், தரகர்கள் வளர்ச்சி காண்பார்கள் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 11, 12.

திசைகள்: தென்மேற்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: புகை நிறம், பச்சை, சிவப்பு.

எண்கள்: 1, 4, 5, 9.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்வது நல்லது. வயோதிகர்கள், ஏழைகளுக்கு உதவி செய்யவும்.



ரிஷப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் உலவுவது விசேடமாகும். செவ்வாய், கேது ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல்நலம் சீராகும். வாழ்க்கை வசதிகள் பெருகும். கலைஞர்களது நோக்கம் நிறைவேறும். மாதர்கள் நலம் பெறுவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

உற்சாகம் பெருகும். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. குழந்தைகளின் நடத்தையிலும் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு தெளிவான போக்கு தென்படும். அரசுப் பணிகளில் விழிப்பு தேவை. மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. வயிறு, கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 11, 12.

திசைகள்: வடமேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை.

எண்கள்: 5, 6,, 7, 9.

பரிகாரம்: சூரியன், ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்ளவும்.



மிதுன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டில் குருவும், ஆறில் சனியும், எட்டில் புதனும், சுக்கிரனும் பத்தாம் இடத்தில் கேதுவும் உலவுவதால் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். நல்ல தகவல் வந்து சேரும். வியாபாரம், கணிதம், பத்திரிகைத் துறையினர் உயர்வார்கள். கலைஞர்களது நிலை உயரும். பெண்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும்.

எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். ஆன்மிக, அறநிலையப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். தாய் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். சனி பலம் இருப்பதால் உழைப்புக்குரிய பயன் கிடைத்துவரும். பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகினால் நலம் கூடப் பெறலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 11, 12.

திசைகள்: வடமேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், நீலம், பச்சை.

எண்கள்: 5, 6, 7, 8.

பரிகாரம்: துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.



கடக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றில் ராகுவும் ஆறில் சூரியனும் உலவுவதால் பிற மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும். பயணத்தின் மூலம் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உண்டு. புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் புகழ்வார்கள்.

குழந்தைகள் நலத்தில் கவனம் தேவை. மறதியால் அவதி ஏற்படும். தொழிலில் கவனம் தேவை. எதிலும் நிதானம் தேவை. இயந்திரப்பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. சகோதரர்களின் நலனில் கவனம் தேவைப்படும். 11-ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு ஓரளவு வளர்ச்சி தெரியவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 11, 12.

திசைகள்: தென்மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், ஆரஞ்சு

எண்கள்: 1, 4.

பரிகாரம்: செவ்வாய், சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. சுப்பிரமணியரையும்,  லட்சுமி நரசிம்மரையும் வழிபடவும்.



சிம்ம ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு ஆறில் புதனும் 12-ல் வக்கிர குருவும் உலவுவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். தொழிலில் அபிவிருத்தி காண அதிகம் உழைக்க வேண்டிவரும். வியாபாரம், கணிதம், எழுத்து, தரகு போன்ற இனங்கள் லாபம் தரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். அந்நியர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அலைச்சல் அதிகமாகும்.

கணவன் மனைவி இடையே சலசலப்புக்கள் ஏற்படும். கலைத்துறையில் போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். பெண்களால் ஆடவர்களுக்குச் சங்கடம் உண்டாகும். சுகம் குறையும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. மார்பு, இதயம் சம்பந்தமான உபாதைகள் உள்ளவர்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 11, 12.

திசைகள்: வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5.

பரிகாரம்: சர்ப்ப கிரகங்களுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும். துர்காம்பிகையையும் விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.



கன்னி ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றில் சனியும் ஐந்தில் சுக்கிரனும் ஆறில் செவ்வாயும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். எதிரிகள் அடங்குவார்கள். சுபச்செலவுகள் செய்ய வேண்டிவரும். அலைச்சல் வீண்போகாது. இயந்திரப்பணியாளர்களுக்கு ஏற்றம் உண்டாகும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் கூடும். மன மகிழ்ச்சி பெருகும். வாரப் பின்பகுதியில் பொருள்வரவு மேலும் கூடும்.

மகப்பேறு பாக்கியத்திற்குச் சந்தர்ப்பம் கனிந்துவரும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். நண்பர்கள், உறவினர்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். அரசுப்பணியாளர்கள் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,ஜனவரி 8, 11, 12.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 8, 9.

பரிகாரம்: சூரியன், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்ளவும். நாகர் வழிபாடு அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்