வார ராசி பலன் 28-05-2015 முதல் 03-06-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 3-ல் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. வார முன்பகுதியில் சந்திரனும் சாதகமாக உலவுவதால் எதிர்ப்புகள் குறையும். புதியவர்களின் தொடர்பு பயன்படும். பயணத்தால் முக்கியமானதொரு காரியம் நிறைவேறும். கணவன்- மனைவி உறவு நிலை திருப்தி தரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். பெண்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். வாரப் பின்பகுதியில் மனதில் சலனம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படும். பக்குவமாகப் பேசிச் சமாளிக்கவும். 30-ம் தேதி முதல் கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகமாகும். நண்பர்களும் உடன்பிறந்தவர்களுக்கும் தக்க சமயத்தில் முன்வந்து உதவுவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 28 (பிற்பகல்), 29, 31.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: புகை நிறம், இளநீலம், வெண்மை, பச்சை.

எண்கள்: 4, 5, 6. ‎

பரிகாரம்:

சனிப் பிரீதி செய்வது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 2-லும், கேது 11-லும் உலவுவது சிறப்பு. இதர முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சிறு இடர்பாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. கெட்ட பழக்கவழக்கங்களுக்கு இடம் தரலாகாது. எதிலும் வேகத்தைக் குறைத்து, விவேகத்தைக் கூட்டிக் கொள்ளவும். அதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எரிபொருள், மின்சாரம், கூரிய ஆயுதங்களைக் கையாளும்போது எச்சரிக்கை தேவை. ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். பக்தி, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு உண்டாகும். 30-ம் தேதி முதல் எதிர்ப்புகள் குறையும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்டமான தேதிகள்:

மே 28 (பிற்பகல்), 29, 31, ஜூன் 2.

திசைகள்:

வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்:

மெரூன், வெண்மை, இளநீலம்.

எண்கள்:

6, 7.

பரிகாரம்:

துர்க்கைக்கு நெய்தீபம் ஏற்றி ஸ்லோகம் சொல்லவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 2-ல் குருவும், 6-ல் சனியும், 10-ல் கேதுவும் உலவுவதால் அலைச்சல் அதிகமாகும். இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களால் செலவுகளும் பிரச்சினைகளும் ஏற்படும். தாய் நலனில் கவனம் தேவை. வார நடுப்பகுதியில் முக்கியமான குறிக்கோள் ஒன்று நிறைவேறும். பிள்ளை நலம் மகிழ்ச்சி தரும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும்.

வாரப் பின்பகுதியில் பொதுப் பணிகளில் ஈடுபாடு கூடும். தொழிலாளர்களது நிலை உயரும். விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். கலைத் துறையினருக்கு ஆதரவு கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். குடும்ப நலம் சிறக்கும். 30-ம் தேதி முதல் செல்வ நிலை உயரும். முக வசீகரம் கூடும். வாழ்க்கைத்துணைவரால் நன்மைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்:

மே 28 (பிற்பகல்), 29, 31, ஜூன் 2.

திசைகள்:

தென்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு, மேற்கு.

நிறங்கள்:

பொன் நிறம், நீலம், மெரூன்.

எண்கள்:

3, 6, 7, 8.

பரிகாரம்:

மகாவிஷ்ணு, முருகனை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 11-ல் சூரியனும் செவ்வாயும் புதனும், 12-ல் சுக்கிரனும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். போட்டிகளில் வெற்றி கிட்டும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். புதியவர்களது சந்திப்பால் பயன் பெறுவீர்கள். உற்றார் உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துகள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும்.

அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமையால் ஓரிரு சாதனைகளைச் செய்வீர்கள். அரசாங்க உதவி கிடைக்கும். குடும்ப நலம் சிறக்கும். பெரியவர்கள், மேலதிகாரிகள், உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். வாரப் பின்பகுதியில் பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்பட்டு விலகும். தலை, வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்:

மே 28 (பிற்பகல்), 29, 31.

திசைகள்:

தெற்கு, கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்:

சிவப்பு, புகை நிறம், இளநீலம், பச்சை, ஆரஞ்சு.

எண்கள்:

1, 4, 5, 6, 9.

பரிகாரம்:

சனிக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை செய்வது நல்லது. சக்தி வழிபாடு நலம் தரும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சூரியன், செவ்வாய், புதனும், 11-ல் சுக்கிரனும் உலவுவதால் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் திறமையாலும் செயலாற்றலாலும் ஓரிரு சாதனைகளைச் செய்வீர்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல்நலம் சீராகும். வியாபாரம் வளர்ச்சி அடையும். கலைத் துறையினருக்கு சுபிட்சம் கூடும்.

பெண்களின் நோக்கம் ஈடேறும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். எரிபொருள், மின்சாரம், ஆயுதம், கட்டிடப் பொருட்கள், செந்நிறப் பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். பக்குவம் தேவை. 30-ம் தேதி முதல் சுபச் செலவுகள் அதிகரிக்கும். நல்ல இடமாற்றம் கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்:

மே 28 (பிற்பகல்), 29, 31, ஜூன் 2.

திசைகள்:

தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு.

நிறங்கள்:

இளநீலம், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு.

எண்கள்:

1, 5, 6, 9.

பரிகாரம்:

சனி, ராகு, கேதுவுக்குத் தொடர்ந்து பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 9-ல் புதனும், 10-ல் சுக்கிரனும், 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். அலைச்சல் சற்றுக் கூடும் என்றாலும் பலனும் கிடைக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சில் இனிமை கூடும். செயலில் வேகம் பிறக்கும். பொதுநலப் பணிகளில் ஆர்வம் அதிகமாகும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆதரவாக இருப்பார்கள். செய்து வரும் தொழில் வளர்ச்சி பெறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடம் மாறி, குருவுடன் இணைவதால் செல்வ நிலை உயரும். பாக்கிப் பணம் வசூலாகும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி பெருகும். மகப்பேறு பாக்கியம் உண்டு. சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். தம்பதியர் உறவு நிலை சீராகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்:

மே 28 (பிற்பகல்), 29, 31, ஜூன் 2.

திசைகள்:

மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்:

வெண்மை, நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்:

3, 5, 6, 8.

பரிகாரம்:

ராகுவுக்காக துர்க்கையையும், கேதுவுக்காக விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்