வார ராசி பலன் 16-04-2015 முதல் 22-04-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுத்திருக்கிறார். சுக்கிரன் இரண்டிலும், ராகு ஆறிலும் உலவுவதும் சிறப்பாகும். சூரியன் ஜன்ம ராசியில் இருந்தாலும் உச்ச ராசியில் இருப்பதால் நலம் புரிவார். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உயர் பதவி, பட்டங்கள் கிடைக்கும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளில் லாபம் உண்டு.

வாழ்க்கைத் துணைவரால் நலம் ஏற்படும். கூட்டாகத் தொழில் செய்பவர்கள் வளர்ச்சி காண வழிபிறக்கும். பேச்சில் இனிமையும் திறமையும் கூடும். தலை சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். பயணம் லாபம் தரும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். வாரப் பின்பகுதியில் விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். கடுமையாக உழைத்தால் அதிக பயன் பெறலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 16, 22.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு.

‎ நிறங்கள்: புகை நிறம், சிவப்பு, இளநீலம்.

எண்கள்: 1, 4, 6, 9.

பரிகாரம்:

புதன், சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்ளவும். திருமாலையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

ரிஷப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பலம் பெற்றிருக்கிறார். 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். தோற்றப்பொலிவு கூடும். எடுத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். புதியஆடை, அணிமணிகள் சேர்க்கையும் ஆதாயமும் உண்டு. கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். எதிர்ப்புகள் இருக்கும் என்றாலும் சமாளிப்பீர்கள்.

ஆன்மிகவாதிகளுக்குத் தெளிவான போக்கு நிலவும். வார நடுப்பகுதியில் செலவுகள் அதிகமாகும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். அரசியல், நிர்வாகம், பொறியியல், வியாபாரம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். வாரக் கடைசியில் புகழும் மதிப்பும் உயரும். நல்ல தகவல் வந்து சேரும். சகோதரிகளால் நலம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 16, 17, 22.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.

எண்கள்: 6, 7.

பரிகாரம்:

திருமாலை வழிபடவும். ஏழை மாணவர்கள் படிக்க உதவவும்.

மிதுன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் சனியும், 10-ல் கேதுவும் 11-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.

உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும் நலம் உண்டாகும். புதிய சொத்துகள் சேரும். பணவரவு இருக்கும். மாணவர்களது திறமை பளிச்சிடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நல்லவர்கள் உங்களைச் சூழ்ந்து இருப்பார்கள். சுபகாரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வசதிகள் பெருகும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 16, 17, 22.

திசைகள்: கிழக்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு, வ்டகிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு, பொன் நிறம், பச்சை, நீலம்.

எண்கள்: 1, 3, 5, 6, 7, 8, 9.

பரிகாரம்:

துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வழிபடவும்.

கடக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றில் ராகுவும் பத்தில் சூரியனும் செவ்வாயும் புதனும் 11-ல் சுக்கிரனும் உலவுவதால் தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு கூடிவரும். அரசுப் பணிகள் நிறைவேறும். இயந்திரப் பணியாளர்களுக்கும் பொறியாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களில் வருவாய் வந்து சேரும். புதிய முயற்சிகள் கைகூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு அதிகமாகும். பெண்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் ஏற்படும். பயணத்தால் காரியங்கள் நிறைவேறும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 17, 22.

திசைகள்: தெற்கு, கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, புகை நிறம், இளநீலம், பச்சை, ஆரஞ்சு

எண்கள்: 1, 4, 5, 6, 9.

பரிகாரம்:

சனிப்பிரீதி செய்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும். ஹனுமன் சாலீஸா படிக்கலாம். கேட்கலாம்.

சிம்ம ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு ஒன்பதில் சூரியனும் செவ்வாயும் 10-ல் சுக்கிரனும் உலவுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் சூரியன் தன் உச்ச ராசியிலும் செவ்வாயும் சுக்கிரனும் சொந்த வீட்டிலும் உலவுவதால் நலம் உண்டாகும். உயர்பதவிகளும் பட்டங்களும் தேடிவரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். தான, தர்மப் பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு அதிகமாகும்.

பெற்றோர் நலம் சீராகும். ஆத்மபலம் கூடும். ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் உண்டாகும். விஷத்தாலும் விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம் என்பதால் விழிப்புத் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

அதிர்ஷ்டமான தேதி: ஏப்.22.

திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், பொன் நிறம், சிவப்பு, ஆரஞ்சு.

எண்கள்: 1, 6, 9.

பரிகாரம்:

சனி, ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். நாகரையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றில் சனியும் எட்டில் புதனும் ஒன்பதில் சுக்கிரனும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து வாழ்வில் முன்னேறுவீர்கள். உழைப்பு வீண்போகாது. பண நடமாட்டம் திருப்தி தரும். நண்பர்களும் உறவினர்களும் தக்க தருணத்தில் முன்வந்து உதவுவார்கள். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். தம்பதியர் உறவு நிலை சீராகும்.

குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வாரப் பின்பகுதியில் தொலைதூரத் தொடர்பு ஆக்கம் தரும். மாதர்களது நிலை உயரும். தொழிலாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. பதற்றம் கூடாது. புதியவர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 17, 22.

திசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 8.

பரிகாரம்:

சூரியன், செவ்வாய், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைத் தொடரவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

22 mins ago

கல்வி

15 mins ago

இந்தியா

12 mins ago

தமிழகம்

18 mins ago

ஓடிடி களம்

25 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்