வார ராசி பலன்: 27 - 09- 18 முதல் 03- 10-18 (மேஷம் முதல் கன்னி வரை)

By பெருங்குளம் ராமகிருஷ்ணன்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் பல வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீரும். பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும். கலைத் துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு, கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். நீண்டநாள் கஷ்டம் நீங்கும். மாணவர்களுக்கு, கல்விச்செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி l திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் l எண்கள்: 3, 4, 9 பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்த காரியத் தடைகள் நீங்கும். குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாக்குக்கு அதிபதியான புதன் சஞ்சாரத்தால் சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சினைகள் நீங்கும். மரியாதை, அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரச் சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கலைத் துறையினருக்கு லாபகரமாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அரசியல்வாதிகள் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி l திசைகள்: தெற்கு, தென்மேற்கு l நிறங்கள்: சிவப்பு, வெள்ளை l எண்கள்: 5, 6 l பரிகாரம்: வெள்ளிக்கிழமை நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய பணவரத்து இருக்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் சஞ்சாரம் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தரும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதால் மூலம் நட்பும், உறவினர்களிடம் சுமூகமான நிலையும் நீடிக்கும். உல்லாசப் பயணம் செல்லலாம். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு, மனக்குறை நீங்கி நம்பிக்கை உண்டாகும். கலைத் துறையினருக்கு, துணிச்சல் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு, கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களை படிக்க வேண்டும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி l திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு l நிறங்கள்: நீலம், பச்சை l எண்கள்: 2, 5, 6 l பரிகாரம்: பெருமாளை புதன்கிழமையன்று தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணத்தால் நன்மை கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாகப் பயணங்கள் இருக்கும். உத்தியோகத்தில் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். உறவு பலப்படும். கலைத் துறையினருக்கு, கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகள் கோபமாகப் பேசுவதைத் தவிர்க்கவும். மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வத்துடன் பாடங்களைப் படிப்பீர்கள்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி l திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு l நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் l எண்கள்: 2, 6 l பரிகாரம்: அபிராமி அந்தாதி பாடி அம்மனை வணங்கி வந்தால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் வாக்குவாதங்கள் அகலும். எந்தக் காரியத்தையும் சிறிது முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் மீண்டும் வரும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வர்த்தக ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகள் கோபமாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும். மேல் மட்டத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெறுவதற்கு கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி l திசைகள்: வடக்கு, வடமேற்கு l நிறங்கள்: சிவப்பு, பச்சை எண்கள்: 1, 5, 6 பரிகாரம்: துளசி அர்ப்பணித்து ஐயப்பனை அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும்.

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

மேலும்