இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வீடு மாற நினைத்தவர்களுக்கு நல்ல காற்றோட்டமுள்ள வீடு கிடைக்கும். சிலர் வாகனம் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.

ரிஷபம்: தொட்டதெல்லாம் துலங்கும். சகோதரர்கள் உங்களை சரியாகப் புரிந்து கொள்வார்கள். சொத்து, வாகனம் வாங்க முன்பணம் தருவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

மிதுனம்: பங்கு வர்த்தகத்தில் லாபம் உண்டு. நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கடகம்: யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.

சிம்மம்: ஒருபுறம் பணம் வந்தாலும் மற்றொருபுறம் செலவுகளும் தொடர்ந்தபடி இருக்கும். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: எதிர்காலத்துக்கான பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பும், ஆலோசனையும் கிடைக்கும்.

துலாம்: பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான விசா கிடைக்கும். நீண்ட நாட்களாக விலகியிருந்த பழைய உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: மாறுபட்ட அணுகுமுறையால் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். சமூகத்தில் பிரபலமானவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். விருந்தினர் வருகை உண்டு.

தனுசு: அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வெகுதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மனைவிவழி உறவினர்களால் சில வேலைகள் நிறைவேறும்.

மகரம்: எதிலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்: பிரச்சினைகள், சிக்கல்கள், உடல்நலக் குறைவுகள் என்று வந்தாலும் எதையும் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் திறன் கிடைக்கும். புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

மீனம்: பிள்ளைகளால் உற்சாகமடைவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றிவிட்டு நவீனரக வாகனம் வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்