இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று வெற்றிகரமாக முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

ரிஷபம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ உத்தரவாதமோ தர வேண்டாம். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: மனநிறைவுடன் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். கடன் பிரச்சினையைத் தீர்க்க மாற்றுவழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மனம்விட்டுப் பேசுவீர்கள். அரசியல்வாதிகளுடன் திடீர் சந்திப்பு நிகழும்.

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பணவரவு உண்டு.

துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். காற்றோட்டமுள்ள புதிய வீட்டுக்கு குடியேறுவீர்கள்.

விருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: அவ்வப்போது பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவது வருத்தத்தைத் தரும். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள்.

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். உடல்நிலை சீராக இருக்கும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். கலைப்பொருட்கள் சேரும்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாகச் செய்து பாராட்டு பெறுவீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்: வீண்செலவுகளைத் தவிர்த்து சேமிக்கும் எண்ணம் ஏற்படும். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

18 mins ago

விளையாட்டு

59 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்