கிருத்திகை... ராகுகாலம்... முருக தரிசனம்!

By வி. ராம்ஜி

இன்றைய கிருத்திகை நாளில் ராகுகால வேளையில், முருகக் கடவுளை தரிசனம் செய்யுங்கள். எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.

மாதந்தோறும் வருகிற கிருத்திகையும் சஷ்டியும் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்கள். இந்த நாளில் சஷ்டி விரதம் மேற்கொண்டும் கிருத்திகை விரதம் மேற்கொண்டும் முருகப்பெருமானைத் தரிசிப்பார்கள் பக்தர்கள்.

வைகாசி மாதத்தின் விசாகம் போலவே கிருத்திகையும் மிகவும் விசேஷமானது. இந்தநாளில், முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்ளலாம். மேலும் விரதம் இருக்க இயலாதவர்கள் கூட கந்தனை நினைத்து பாராயணம் செய்து வழிபடலாம்.

இன்று 2.6.19 ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை. இந்த கிருத்திகை நட்சத்திர நன்னாளில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் செல்லுங்கள். முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்துங்கள். முடிந்தால், சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்யுங்கள்.

மிக முக்கியமாக், ஞாயிற்றுக்கிழமையான இன்று மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகாலம். எனவே ராகுகால வேளையில், ஆலயம் சென்று, முருகக்கடவுளை மனதார வழிபடுங்கள். உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் யாவும் விலகிவிடும். கவலைகள் அனைத்தும் காணாமல் போய்விடும். கடன் தொல்லையில் இருந்து மீண்டுவிடுவீர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்