2019: அனுஷ நட்சத்திரத்துக்கான பலன்கள்

By பெருங்குளம் ராமகிருஷ்ணன்

எந்த வேலையையும் அதிக சிரத்தையுடனும் அதீத முயற்சியுடனும் செய்யும் அனுஷ நட்சத்திர அன்பர்களே!

இந்த புத்தாண்டில் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு இருக்கும்.

இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். அரசு தொடர்பான  காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும்.  புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்துப் பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.

பெண்கள் எந்தச் செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள், வீண் அலைச்சல் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்கள், கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.

+: குடும்ப நிலை சிறக்கும்.

-: எடுத்த காரியங்களில் தடை.

பரிகாரம்:  பைரவரை வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும். குறிப்பாக, தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செந்நிற மலர்கள் சூட்டுங்கள். வடைமாலை சார்த்துங்கள். தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். எதிரிகள் காணாமல் போவார்கள். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். காரியம் வீரியமாகும். வெற்றி நிச்சயம். சனீஸ்வர தரிசனமும் நல்லது. எள்தீபமேற்றி வழிபடுங்கள். 

மதிப்பெண்கள்: 82%

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்