ஐயப்ப சுவாமியின் அற்புதத் தகவல்கள்!

By வி. ராம்ஜி

* ஐயப்ப சுவாமிக்கு 1973-ம் ஆண்டு சித்திரைத் திருநாள் மகாராஜா, தங்க அங்கி தயாரித்து காணிக்கையாகச் கொடுத்தார். 420 பவுன் கொண்ட இந்த தங்க அங்கி மண்டல பூஜை கடைசி நாள் ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும்.

* சபரிமலை ஐயப்ப சுவாமியின் உற்ஸவர் ஆண்டுக்கு ஒரு முறை, பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு, அவருக்கு ஆராட்டு உற்ஸவம் நடைபெறும்.

பிறகு சுவாமியை அலங்கரித்து பம்பா விநாயகர் கோயிலுக்கு முன்பு, முன்பு மக்கள் தரிசனத்துக்காக வைத்திருப்பார்கள்.

சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் ஐயப்ப உற்ஸவரைத் தரிசிக்கலாம்.

* சபரிமலை செல்லும் வழியில் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்கிறார்கள் பக்தர்கள் சிலர்!

* ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாகக் கொண்டே, இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு பம்பா நதிக்கரையில் தர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

* பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புறச் சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணைவதைச் சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவம்.

* சபரிமலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்பவர்களும் உண்டு.

* ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப்போல் தியானக் கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவைப் போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷம் என்று போற்றுகிறார்கள் ஐயப்ப குருசாமிகள்!

* ஐயப்ப சுவாமி, தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தைச் சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனைச் சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது.

* சென்னை பாரிமுனை அரண்மனைக் காரத் தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் ஐயப்பனுக்கு சந்நிதி உள்ளது. சபரிமலை கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ஐயப்பன் சிலை கொண்டு செல்லப்பட்ட போது, அவரை சில தலங்களில் வைத்து பூஜை செய்தனர். இங்கு பூஜை செய்தபோது மூன்று நாட்கள் வரை, சிலையை எடுத்துச் செல்ல சுவாமியின் உத்தரவு கிடைக்கவில்லை. இதன் பிறகே எடுத்துச் சென்றனர். சபரிமலை ஐயப்பன் இங்கிருந்ததை நினைவூட்டும் வகையில், இங்கே தனியாக சந்நிதி அமைக்கப்பட்டது. சபரிமலையில் நடப்பது போலவே இவருக்கு பூஜைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

* ஸ்ரீகிருஷ்ண அவதாரத்திற்குப் பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஐயப்பன் அவதாரம் தான் என்று ஆன்மிகப் பெரியோர் சிலாகித்துச் சொல்கின்றனர்.

* குளத்துப் புழா ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு, பிரார்த்தனை செய்து விட்டு, குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால் அவர்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

19 mins ago

தமிழகம்

56 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்