மார்கழியில் பாடுவோம் திருவெம்பாவை!

By சிதம்பரம் உ.வெங்கடேச தீட்சிதர்

திருவெம்பாவை - 4

ஒண்ணித்திலநகையாய்இன்னம்புலர்ந்தின்றோ

வண்ணக்கிளிமொழியார்எல்லோரும்வந்தாரோ

எண்ணிக்கொடுள்ளவாசொல்லுகோம்அவ்வளவும்

கண்ணைத்துயின்றுஅவமேகாலத்தைப்போக்காதே

விண்ணுக்குஒருமருந்தைவேதவிழுப்பொருளைக்

கண்ணுக்குஇனியானைப்பாடிக்கசிந்துள்ளம்

உள்நெக்குநின்றுருகயாம்மாட்டோம்நீயேவந்து

எண்ணிக்குறையில்துயிலேலோர்எம்பாவாய்.

முத்துப் போன்ற புன்னகை உடையவளே! இன்னுமா விடியவில்லை? என்கிறாளாம் தோழி.

அதற்குப் படுத்திருப்பவள், அழகிய கிளி போன்ற சொற்களைப் பேசுபவள்... தோழியர் எல்லாரும் வந்துவிட்டார்களா? என்று கேட்கிறாள்.

உடனே தோழியர், உள்ளதையே எண்ணித்தான் சொல்லுகின்றோம்.

கண் துயின்று வீணாகக் காலத்தைப் போக்காதே! விண்ணுலகும்

போற்றுகிற ஒரே மருந்தை, வேதத்தால் மேன்மையாக உணரப்படும்

பொருளை, காண்பதற்கு இனிமையான சிவபெருமானை, நெக்குருகக் கசிந்து பாட வந்துள்ள நாங்கள், இதெல்லாம் செய்ய மாட்டோம்.

வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக்கொள். குறைந்தால் தூங்கிக்கொள் என்று சொல்கிறார்கள்.

(ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில நகையாய்).

தரிசிக்க இனியவரான சிவபெருமானை, நெஞ்சுருகப் பாடுவோம். மாணிக்கவாசகர் உருகி உருகி எழுதிய, திருவெம்பாவையைப் பாடுவோம். மனதிற்கினிய சம்பவங்கள், நம் வாழ்வில் நிகழ்வது நிச்சயம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

39 mins ago

சினிமா

56 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்