தாவோ கதை: சண்டைச் சேவல்

By ப்ரதிமா

ண்டைச் சேவல் வளர்க்கும் ஒருவர் தன் சேவல் இன்னும் மூர்க்கமாகச் சண்டையிட வேண்டும் என நினைத்தார். அதற்காகப் பயிற்சியாளரிடம் தன் சேவலை ஒப்படைத்தார். சில வாரங்கள் கழித்துச் சேவலைப் பார்க்கச் சென்றார். அது எதிர்பார்த்த அளவுக்குச் சத்தமாகக் கொக்கரிக்கவில்லை. அமைதியாக இருந்தது. “சேவல் இன்னும் சண்டைக்குத் தயாராகவில்லை” என்றார் பயிற்சியாளர். மேலும் இரண்டு வாரங்கள் கழித்துச் சென்றார் உரிமையாளர்.

அப்போதும் சேவல் தலையைக்கூடத் தூக்காமல் மெதுவாகத் தன் இறக்கையை விரித்தது. “இன்னும் தயாராகவில்லை” என்றார் பயிற்சியாளர். இன்னுமொரு வாரம் கழிந்தது. இப்போது சேவல், கோழிக்குஞ்சு போல் அமைதியாகவும் சாதுவாகவும் இருந்தது. “என் சண்டைச் சேவலை நீங்கள் சீரழித்துவிட்டீர்கள்” என்று பயிற்சியாளரைப் பார்த்துக் கத்தினார் சேவலின் உரிமையாளர்.

“நிச்சயமாக இல்லை. சேவலைப் பாருங்கள். அது எத்தனை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது! இப்போது பதற்றமேயில்லாமல் வலிமையோடு நிற்கிறது பாருங்கள்! இந்தச் சேவலை வேறெந்த சண்டைப் பறவை பார்த்தாலும் பார்த்த கணத்திலேயே விலகி ஓடிவிடும்” என்றார் பயிற்சியாளர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்