வலு தரும் சாமை பெசரட்

By ப்ரதிமா

சிறு தானியங்களில் ஆரோக்கியம் இருக்குமே தவிர சுவை இருக்காது என்பது பலரது நினைப்பு. “அது முற்றிலும் தவறு. சிறு தானிய வகைகளிலும் அசத்தல் சுவையுடன் சமைக்கலாம்” என்கிறார் நெய்வேலியைச் சேர்ந்த சாய்சுதா. நமக்கு நன்கு அறிமுகமான தோசை, பொங்கல் வகைகளைச் சிறு தானியங்களில் செய்யக் கற்றுத் தருகிறார் அவர். இனி தினம் தினம் ஆரோக்கியம்தான்!

சாமை பெசரட்

என்னென்ன தேவை?

பச்சைப் பயறு-1 கப்

சாமை-அரை கப்

பச்சை மிளகாய்-4

சீரகத் தூள்-1 டீஸ்பூன்

கடுகு-அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை-சிறிதளவு

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பச்சைப் பயறையும் சாமைப் பயறையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அவற்றுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, சீரகத் தூள் சேர்த்து கடுகு தாளித்துச் சேர்க்கவும். இந்த மாவைச் சூடான தோசைக் கல்லில் ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டுத் திருப்பிப் போடவும். இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். மொறுமொறுப்புடன் இருக்கும் இந்த பெசரட்டுடன் தக்காளி சட்னி அல்லது இஞ்சி சட்னி சேர்த்துப் பரிமாறலாம்.



சாய்சுதா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

விளையாட்டு

37 mins ago

விளையாட்டு

39 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

மேலும்