கத்திரி வாழைப்பூ தொக்கு

By செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கத்திரிக்காய் - 3

வாழைப்பூ - 50 கிராம்

லவங்கப்பட்டை - சிறு துண்டு

பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

தக்காளி சாறு - 1 கப்

கடுகு - சிறிதளவு

இஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கத்திரிக்காயை வெட்டி, லேசாக எண்ணெய் விட்டு வதக்கவும். நறுக்கிய வாழைப்பூவுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, லவங்கப்பட்டை, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சாறு, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். வேகவைத்த வாழைப்பூ, வதக்கிய கத்திரிக்காய் சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: கிருத்திகா, திருச்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 secs ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்