அன்பாசிரியர் தொடர் எதிரொலி: அரசுப் பள்ளிக்கு 4 கணினிகள் வழங்கிய தி இந்து வாசகர்கள்!

By க.சே.ரமணி பிரபா தேவி

மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம்.

இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையையும் தவறாமல் குறிப்பிடுகிறோம். இதைத் தொடர்ந்து படித்துவரும் 'தி இந்து' வாசகர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

>அன்பாசிரியர் 25: தங்கராஜ்- உழைப்போடு ஊதியத்தையும் தரும் ஆசான்! தொடரில் குறைவான விலையில் அல்லது பயன்படுத்திய நிலையில் இருக்கும் கணினிகள் கிடைத்தால் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்க முடியும் என்பதால் அவற்றை வாங்கும் முயற்சியில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார் ஆசிரியர் தங்கராஜ்.

இந்நிலையில், இந்த அத்தியாயத்தைப் படித்த பெயர் குறிப்பிட விரும்பாத, பன்னாட்டு வங்கியில் வேலைபார்க்கும் 'தி இந்து' வாசகர்கள் இருவர் மற்றும் அவர்களது நண்பர்கள் இணைந்து, அன்பாசிரியர் தங்கராஜ் பணிபுரியும் நாமக்கல் ஊத்துப்புளிக்காடு அரசு ஆரம்பப்பள்ளிக்கு 4 கணினிகள் மற்றும் 6 மேசைகளை இலவசமாக வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

அத்தோடு கணினியில் கோளாறு ஏதேனும் ஏற்பட்டால் அவற்றை இலவசமாகப் பழுது நீக்கித் தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.

எங்களின் பெருங்கனவை, 'தி இந்து'- அன்பாசிரியர் தொடர் நிறைவேற்றிவிட்டது என்று மகிழ்கிறார் அன்பாசிரியர் தங்கராஜ்.

இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

வாழ்வியல்

15 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்