சிங்கப்பூரில் பொன்னியின் செல்வன்: நாடக வடிவம்- ஒத்திகை

By செய்திப்பிரிவு

சிங்கப்பூரில் 2017 ஏப்ரல் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ் மொழி விழாவின் ஒருபகுதியாக கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாடகம் முதல் முறையாக சர்வதேச அரங்கில், சிங்கப்பூர் Esplanade- இல் நடைபெற உள்ளது.

2014, 2015ஆம் ஆண்டுகளில் இந்தியாவில், தமிழகத்தில் 33 முறைகளுக்கு மேல் 'பொன்னியின் செல்வன்' நாடகத்தை நிகழ்த்திய S.S.இண்டர்நேஷனல் லைவ் இப்போது சிங்கப்பூரில் Arte Compass நிறுவனத்துடன் இணைந்து பொன்னியின் செல்வனை அரங்கேற்ற உள்ளனர். தி இந்து (தமிழ்) இணையதளம் இந்நிகழ்ச்சியின் ஆன்லைன் பார்ட்னராக உள்ளது.

தமிழ் நாடக உலகில் தனக்கென ஒரு தனித்தன்மையுடன், உலகமெங்கும் பயணித்து புதிய நாடக வடிவை பறைசாற்றிக் கொண்டிருக்கும் Magic Lantern குழுவினர் பொன்னியின் செல்வன் நாவலை மிக அற்புதமான நாடக வடிவமாக வழங்கி கல்கியின் ரசிகர்களை மட்டுமல்லாமல், நாடக ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி உள்ளனர். இந்த Magic Lantern இன் திறமையான கலைஞர்களுடன், சிங்கப்பூரில் உள்ள திறமையான கலைஞர்களும் நாடகத்தில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் நாடக ஒத்திகை தொடர்பான வீடியோ பகிர்வு:



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்