ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட்டில் செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன்

By செய்திப்பிரிவு

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட்டில் சென்னையைச் சேர்ந்த செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.

முத்தூட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதர வுடன் பள்ளிகள் இடையிலான ஜூனி யர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பைக்கான டி 20 கிரிக்கெட் தொடர் இரு கட்டங்களாக நடத்தப் பட்டது. இதில் முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் நடத்தப்பட்ட போட்டிகளில் இருந்து தேர்வான 8 அணிகள் திருநெல்வேலியில் நடைபெற்ற 2-வது கட்ட தொடரில் கலந்து கொண்டு மோதின.

இதன் இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தி யன் மேல்நிலைப் பள்ளி - கோவை  ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் குலேசன் மேல்நிலைப் பள்ளி அணி கள் மோதின. மின்னொளியில் நடை பெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த செயின்ட் பீட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹெச்.பிரஷித் ஆகாஷ் 40 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அணி சார்பில் ஆர்.ஆர்.அகிலேஷ்வர் 21 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். 137 ரன்கள் இலக்குடன் பேட் செய்த  ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக பி.சச்சின் 57, ஆர்.ரிஷிகேஷ் திரிலோச்சன் 32 ரன்கள் சேர்த்தனர்.

செயின்ட் பீட்ஸ் அணி சார்பில் ஒய்.எஸ். ஷாய் சரண், ஹெச்.பிரஷித் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி அணி ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆட்ட நாயகனாக ஹெச்.பிரஷித் ஆகாஷ் தேர்வானார். அதே வேளையில் தொடர் நாயக னாக பி.சச்சினும், சிறந்த பேட்ஸ் மேனாக விக்னேஷ் எஸ்.ஐயரும், சிறந்த பந்து வீச்சாளராக ஐ.வெற்றி வேலும் தேர்வு செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்