வேலூரில் ஒரு கண்ணப்ப நாயனார்

By ந. சரவணன்

யிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கண்ணை திறந்து வைக்கும் ஆசிரியர் முருகேசன் பார்வையற்றவர். 23 ஆண்டு கால ஆசிரியர் பணியில் 9 ஆண்டுகள் 100 சதவீத தேர்ச்சியை அவர் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்.

வேலூர் மாவட்டம் ஓட்டேரி அடுத்த பள்ள இடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். பிறக்கும்போதே கண் பார்வை இல்லை. வேலூர் விழி இழந்தோர் பள்ளியில் ஆரம்பக் கல்வி முடித்து அடையாறு பார்வையற்றோருக்கான பள்ளியில் மேல்நிலை கல்வி படித்து, பின்னர் இளங்கலை வரலாறு படிப்பை வேலூர் முத்துரங்கம் கலைக் கல்லூரியிலும் முதுகலை படிப்பை வேலூர் ஊரீசு கல்லூரியிலும் படித்து முடித்தார்.

கண் பார்வையை குறைபாடாக கருதாமல் விடாமல் படித்தவருக்கு ஆசிரியர் பணியின் மீது ஈர்ப்பு. அடுத்ததாக காட்பாடி கல்வியியல் கல்லூரியில் பிஎட் முடித்தார். தொலைதூரக் கல்வி மூலம் எம்எட் படிப்பையும் முடித்து, விரும்பியபடி ஆசிரியர் பணியில் கடந்த 1994-ல் சேர்ந்தார்.

கணியம்பாடி அரசுப்பள்ளியில் பணியை தொடங்கியவர் இப்போது, காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியின் வரலாற்று ஆசிரியர். கடந்த 23 ஆண்டு கால ஆசிரியர் பணியில், 9 ஆண்டுகள் அரசு பொதுத்தேர்வில் இவரது மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியை எட்டியுள்ளனர்.

பார்வையற்ற ஆசிரியரின் இந்த அளப்பறிய செயல் குறித்து அவரிடமே கேட்டோம், “ஆசிரியர் பணியை அளவுக்கு அதிகமாக நேசிப்பதால்தான் இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்த முடிந்தது” என்கிறார் அடக்கத்துடன்.

மேலும் அவர் நம்மிடம் பகிர்ந்தது: பிறவிலேயே பார்வை இல்லாதது குறித்து நான் எப்போதும் வருத்தப்பட்டது இல் லை. மனிதப்பிறவி என்பது அரிதான ஒன்று. அதை பயனுள்ளதாக மாற்ற வேண்டும். மாற்றங்களை விரும்பும் நாம், அதை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என நினைப்பவன்.

என் தந்தை பீடித் தொழிலாளி. ஏழ்மையாலும் நான் பார்வையற்றவன் என்பதாலும் எனக்கு கல்வி எட்டாக்கனியாகவே இருந்தது. இருப்பினும், அரசு வழங்கிய கல்வி உதவித் தொகையால் படித்தேன்.

பிரெய்லி புத்தகங்களை படித்து அதன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை சொல்லித் தருகிறேன். கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சி பெருக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். வசதியற்ற மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அரசு பொதுத் தேர்வில், வரலாறு பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சியை என் மாணவர்கள் பெறுவதற்கான வியூகங்களை வகுத்து பாடங்களை நடத்துகிறேன். அதன் பயனாக, பொதுத் தேர்வில் 9 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்று மாணவர்கள் எனக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தினமும் 30 கிலோ மீட்டர் தூரம் பேருந்தில் பயணம் செய்து பள்ளிக்குச் சென்று வருகிறேன். இதனால் சிரமமாக இருந்தாலும், தேர்வில் மாணவர்கள் வெற்றிப்பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என பூரிக்கிறார் முருகேசன்.

சிவபெருமானுக்காக வேண்டி தானே தோண்டி எடுத்த தனது கண்ணை அளித்த கண்ணப்ப நாயனார் போல, ஏராளமான கிராமப்புற மாணவர்களுக்கு தனதாக்கிய அறிவுக்கண்ணை கொடுக்கிறார். கண் இல்லை என்றாலும் உலகை விசாலமாகவே பார்க்கிறார்.

விண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி கூறும்போது, ‘மாணவர்களுக்கு எளிமையாகவும் புரியும்படியும் சொல்லிக்கொடுப்பது அவரின் தனி பாங்கு’ என்றார்.

“முருகேசன் சார் வகுப்பு என்றால் எங்களுக்கு ஜாலிதான். வரலாறு பாடத்தை கதைபோல சொல்லுவார். இதனால் வரலாற்றுப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுகிறோம். சாருக்கு பார்வை இல்லை என்றாலும், நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு அவர் கல்வி கண் கொடுத்திருக்கிறார்” என்கின்றனர் அவரது வகுப்பு மாணவ, மாணவிகள்.

ஆசிரியர் முருகேசனுக்கு கண் இல்லைதான். ஆனால் அவர் திறந்து வைத்த ஓராயிரம் அறிவுக் கண்கள் ஊரெல்லாம் பிரகாசிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்