தடுப்பு மருந்து

By செய்திப்பிரிவு

‘உலகிலேயே முதன்முறையாக ஜிகா வைரஸ் தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிப்பு: ஹைதராபாத் மருந்து உற்பத்தி நிறுவனம் தகவல்’ செய்தியைப் படித்தேன். இதற்காக முயற்சி எடுத்தவர்களுக்கு வாழ்த்துகள். அதே சமயம், சாதாரண மக்களும் பயன் அடைகிற மாதிரி விலை இருந்தால் நல்லது.

- மு.சரவணக்குமார், ‘தி இந்து’இணையதளம் வழியாக….



புன்னகையில் புதைந்த சுவாரஸ்யங்கள்

‘மவுனத்தின் புன்னகை’ என்ற அசோகமித்திரனின் கட்டுரை படித்தேன். என்ன அநாயாசமான நடை. பழைய எழுத்தாளர்கள் ரயிலைப் பற்றி எப்படி எழுதியுள்ளார்கள் என்று இவர் தெரிவித்துள்ள விதமே சுவாராஸ்யமாக உள்ளது. இன்றைய தலைமுறையினர் அதிவேக ரயில்கள் பற்றித் தெரிந்துள்ள அளவு, அன்றைய ரயில்களைப் பற்றி அறிந்திருக்க முடியாது. எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் பிரிட்டிஷ் இந்தியாவில் யார் கட்டுப்பாட்டில் இருந்தது போன்ற செய்திகள் அரிய தகவல்கள்.

அன்று காசிக்குச் செல்ல நான்கு ரயில்கள் மாற வேண்டும் என்பதும் ரயில்கள் செல்லாத ஊர்கள் இன்றும் இருக்கின்றன என்பதும் கூடுதல் தகவல்கள். டபிள்யூ என்பதற்கு அன்று கால அட்டவணையில் என்ன பொருள் என்பதற்கு அவர் அளித்துள்ள விளக்கம் அருமை. அதேபோல் ஆர் என்பதற்கு உணவு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளதும் இன்றைய தலைமுறையினர் அறியாத செய்தி.

- ஜீவன்.பி.கே. கும்பகோணம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

46 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்