சரியான கட்டுரை

By செய்திப்பிரிவு

ஆர். இளங்கோவன் எழுதிய ‘புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற முடியாதா?’ கட்டுரையைப் படித்தேன். பழைய, புதிய ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து தேவையான நேரத்தில், எளிமையாக எழுதியிருப்பது வாழ்த்துக்குரியது. மத்திய அரசு அமல்படுத்துவதற்கு முன்பே தமிழக அரசு, நாட்டிலேயே முதன்மையாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை 1.4.2003 அன்று அறிவித்தது என்ற வரிகள் ஊழியர்களின் மீதான அரசின் போக்கைச் சுட்டிக்காட்டியது.

நடைமுறையில் இருக்கிற புதிய ஓய்வூதியத் திட்டம் மாநில அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்ற வரிகளும், மேற்கு வங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களில் தற்போதும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது என்ற வரிகளும் அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றன. கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்றிருக்கிறவர்களைத் தாண்டி, இறந்துபோனவர்களின் குடும்பத்தாரிடம் கருணையோடு நடந்துகொள்ள வேண்டியது மக்கள் நல அரசின் தார்மிகக் கடமை.

- ப.செல்வகுமார், பெரம்பலூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

46 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்