வெறும் விளம்பர உத்தியா?

By செய்திப்பிரிவு

‘மழை நீர் சேகரிப்பை மறுத்தல் தகுமோ?’ கட்டுரை சரியான நேரத்தில் மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. 2002-ல் மழைநீர் சேகரிப்புத் திட்டம் அரசுக் கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களில் அவசியம் இருக்க வேண்டுமென வலியுறுத்தியது தமிழக அரசு.

ஆனால், அதன்பிறகு திட்டத்துக்கான நிதியை ஒதுக்காதது எதைக் காட்டுகிறது? ஒரு முறை அறிமுகம் செய்த திட்டம் சரிவர அமல்படுத்தப்படுகிறதா என்பதை இவர்கள் கண்டுகொள்ளவோ, வலியுறுத்தவோ இல்லையே! எனவே, அரசே இத்திட்டத்துக்கு மூடுவிழா நடத்திய பின்னர் மக்கள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என எப்படி எதிர்பார்க்க இயலும்?

உள்ளூராட்சி அமைப்புகளும், புதிதாகக் கட்டிடம் கட்டுவோரிடம் அனுமதி வழங்க, சதுர அடிக்கு தங்களுக்கு லஞ்சம் இவ்வளவு வேண்டும் என கட்டாயப்படுத்திப் பெறுகிறார்களே தவிர, மழைநீர் சேமிப்பு குறித்துக் கட்டாயப்படுத்தவில்லை.

எனவே, அரசின் திட்டங்கள் பெரும்பாலும் விளம்பர நோக்கில் வெற்று அறிவிப்பாகவே இருப்பதால் அதன் செயல்பாடு என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

- சசிபாலன், ‘தி இந்து’இணையதளத்திலிருந்து…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

வாழ்வியல்

4 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

37 mins ago

க்ரைம்

55 mins ago

விளையாட்டு

50 mins ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்