மிகப் பெரிய சாபக்கேடு

By செய்திப்பிரிவு

பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பெரும்பான்மை இந்துக்களுக்கு சிறுபான்மையினர் மீது வெறுப்புணர்வை வளர்ப்பதையும் கலாச்சார எதிர்ப்புணர்வைக் கூர்மைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட செயல்பாடுகள் அதிகரித்துவருகின்றன. பாஜக அமைச்சர்களும், மக்களவை உறுப்பினர்களும் சேர்ந்தே இந்த நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.

இந்துத்துவ ஒற்றைக் கலாச்சாரத்துக்குத் தங்களின் எதிர்ப்புணர்வுகளை உணர்த்தும் விதமாக 40-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களின் சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பி அளிப்பது என்ற போராட்ட வடிவத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

இந்துத்துவக் கலாச்சாரத்தை இந்தியாவின் ஒரே கலாச்சாரமாக மாற்ற முயல்வதை 21-ம் நூற்றாண்டிலும் பாசிசம் உயிரோடு இருப்பதன் அடையாளமாகவே உணர முடிகிறது. இது அச்ச உணர்வையே மேலும் ஊட்டுகிறது. இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முக அழகைப் போற்றுவதன் மூலமும் பன்முகக் கலாச்சாரத்தை மேலும் புனரமைக்க வேண்டிய தேவையை நிறைவேற்றுவதன் மூலமும் மட்டுமே மக்கள் அனைவருக்கும் நன்மையை விளைவிக்க முடியும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

- சு. மூர்த்தி,அமைப்பாளர், மக்களாட்சிக்கான கல்வி இயக்கம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

14 mins ago

இந்தியா

17 mins ago

வேலை வாய்ப்பு

29 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்