உண்மையான மாற்றங்கள்

By செய்திப்பிரிவு

எட்டாம் வகுப்பு வரை மாணவர்களைத் தக்க வைக்க வேண்டாம் என்ற ஆணை மறுபரிசீலனைக்கு உள்ளாகவிருக்கிறது.

ச.சீ. இராஜகோபாலன் எழுதியிருப்பதுபோல, பெரும்பாலான பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஆண்டு இறுதியில் தேர்வு வைத்து பாஸ் அல்லது ஃபெயில் என்ற அளவுகோல் இருந்தால்தான் மாணவர்களிடம் பயம் இருக்கும் என்ற கருத்துடன்தான் இருப்பார்கள்.

காரணம், அந்த மாதிரியான சிந்தனைக்கு நாம் பழக்கப்பட்டுவிட்டோம். இதை வேறுமாதிரி யோசிக்கலாம். பாஸ், ஃபெயில் என்ற அளவுகோலை விட்டே நாம் வெளியே வந்துவிடலாம். கணிதமேதை ராமானுஜத்தின் மேதமையை நமது பள்ளிகளால் கண்டுபிடிக்க முடியவில்லையே? கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹார்டி இல்லாமல் போயிருந்தால், கணித மேதை ராமானுஜன் ஒரு எழுத்தராகவே பணிபுரிந்து மறைந்திருப்பார்.

கணித உலகுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கும்? எதிர்காலத்திலாவது இதுபோன்ற துயரங்களைத் தடுக்க, ஒவ்வொரு மாணவரும் ஆண்டு இறுதியில் எழுத்துத் தேர்வில் மட்டுமல்லாது, விளையாட்டு, ஓவியம், பேச்சு, எழுத்து போன்ற பல்வேறு திறமைகளில் பெறும் மதிப்பீட்டையும் பதிவுசெய்து அவரை மேல் வகுப்புக்கு அனுப்பிவிடலாம்.

பயத்தின் காரணமாக இல்லாமல் ஆர்வத்தின் காரணமாக மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறைகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தொடங்கும்போதுதான் கல்வியில் உண்மையான மாற்றங்கள் நிகழத் தொடங்கும்.

- கே. ராஜு, மின்னஞ்சல் வழியாக…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்