கல் கண்டு எடுத்தார்

By செய்திப்பிரிவு

இது கவிதை; இது கவிதை அல்ல என்று இனம் காண்பதில் ரசிகமணி பல அளவு கோல்களை இயற்கையிலேயே பெற்றிருந்தார்.

சிவபுராணத்தை மற்றவர்கள் கல்கண்டாய்ப் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், அதில் கல் கண்டு எடுத்தார் ரசிகமணி. “கம்பர் பாட்டல்ல என்று ரசிகமணி நீக்கிய பாடல்களை கம்பரே நேரில் வந்து ‘இவை என்னுடைய பாடல்கள்தாம்’ என்று சொன்னாலும், ஒருவேளை ரசிகமணியே அதை ஒப்புக்கொண்டாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்!” என்று கல்கி ‘கம்பரும் நானும்’ என்ற கட்டுரையில் எழுதியுள்ளார்.

ரசிகமணியின் பாடல் திருத்தங்கள்மீது கல்கி அவ்வளவு உறுதியான, தெளிவான நம்பிக்கை கொண்டிருந்தார்.

- இரா. தீத்தாரப்பன்,மேலகரம்.

***

சிவபுராணத்தின் ‘கல்லாய் மனிதராய்…’ என்கிற வரியில் உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியின் வரிசையில் கல் வருவதற்கு வாய்ப்பில்லை. அது கல்லா மனிதராய் என்றுதான் இருந்திருக்க வேண்டும் என்கிற ரசிகமணி டி.கே.சி-யின் திருத்தம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒரு எழுத்தில் எத்தனை பெரிய மாற்றம். தமிழ் மொழியின் சிறப்புகளை ரசிகமணி டி.கே.சி, திரு.வி.க, மு.வ, வ.வே.சு போன்ற பெரியோர்கள் இந்தத் தலைமுறைக்கு வழங்கிச் சென்றிருக்கிறார்கள். அதைத் திறம்படக் கொண்டுசேர்ப்பதில் ‘தி இந்து’வின் பணி பாராட்டுக்குரியது.

- சு. தட்சிணாமூர்த்தி,பீளமேடு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்