யார் அறிவுறுத்துவது?

By செய்திப்பிரிவு

‘நஞ்சு வாழ்க்கை’ தலையங்கத்தில், காற்றின் தர அட்டவணையின்படி இந்திய நகரங்களின் காற்றில் நச்சுப் பொருட்கள் அதிகம் கலந்திருப்பதுபற்றித் தெரிவித்துள்ளீர்கள். சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் தாம்பரத்திலும் திருச்சியில் அரிமங்கலத்திலுள்ள மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டுவரும் குப்பைக் கிடங்குகள் தீப்பற்றி அந்தப் பகுதியே புகையால் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இந்த நிகழ்வினால் அங்கே எந்த அளவுக்குக் காற்று மாசுபட்டிருக்கும்? ஆனால், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

குறிப்பிட்ட சில உள்ளாட்சிகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுமே திடக்கழிவு மேலாண்மையைச் சரிவரச் செய்வதில்லை என்பது அந்தந்த ஊரின் குப்பைக் கிடங்குகளைப் பார்த்தாலே தெரியும். தவிர, குப்பை சேகரிக்கும் பணியாளர்கள், குப்பைகளை அந்தந்த தெருவிலேயே குவித்து, தீ வைத்துவிட்டுப் போவதும் அதனால், அந்தப் பகுதியே புகைமூட்டமாக இருப்பதும் வழக்கமாகிவிட்டது.

ஊருக்கு நல்லது செய்கிறேன் என்ற பெயரில் பெரிய தீமையை செய்கிறார்கள் என்பதை யார் அவர்களுக்கு அறிவுறுத்தப்போகிறார்கள்?

- வீ. சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 mins ago

க்ரைம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்