மகரன்கோ போற்றுதலுக்குரியவரே!

By செய்திப்பிரிவு

கரூரில் குடிபோதையில் கிடந்த மாணவன்குறித்த செய்தி அறிந்ததும், பள்ளி நிர்வாகம் அந்த மாணவனைப் பள்ளியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருந்தது.

குடி என்னும் சுய மற்றும் சமூகச் சீரழிவுக்கு ஆட்பட்டுள்ள அந்த மாணவனைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுசெல்ல வேண்டியது பெற்றோர் - ஆசிரியர்களின் கடமை. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டோம்;

நம் கடமை முடிந்தது என்று பெற்றோர்களும், அவனுக்குப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்துவிட்டோம்; நம் கடமை முடிந்தது என்று ஆசிரியர்களும் நினைத்ததுதான் அந்த மாணவனை இந்த நிலையில் கொண்டுபோய்த் தள்ளிவிட்டது. உண்மையில் குற்றவாளி யார்? கண்டிப்பாக மாணவன் மட்டும் இருக்க முடியாது.

மதுக் கடைகளின் விற்பனை இலக்கை வைத்து ஆட்சி செய்பவர்களும் குற்றவாளிகள்தான். இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள எஸ். ராமகிருஷ்ணனின் ‘வீடில்லா புத்தகங்கள்’ பகுதி, இன்றைய சமூகச் சூழலில் மிகுந்த கவனத்துக்குரியது. இளம் குற்றவாளிகளைச் சாதனை மாணவர்களாக ஆக்கிய மகரன்கோ போற்றுதலுக்குரியவர்.

- எஸ். சஞ்சய்,மதுரை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

50 mins ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்