விளையாட்டு வழிபாடு

By செய்திப்பிரிவு

கிரிக்கெட்டை முதலில் நாம் விளையாட்டாகவே அணுகுவதில்லை. நம்மைப் பொறுத்தவரை அது போராகவே உருவகிக்கப்படுகிறது.

அதை உறுதிசெய்யும் விதமாக ஒரு தனியார் செய்தி அலைவரிசை ஒன்று உலகப் போர் எனும் பெயரிலேயே கிரிக்கெட் நிகழ்வுகளைத் தொகுத்தளித்துக்கொண்டு இருக்கிறது. கிரிக்கெட் விநாயகரையும் நான் அவ்வரிசையிலேயே சேர்க்கிறேன்.

இந்தியா அன்று வெற்றிபெற்றிராவிட்டால் கிரிக்கெட் விநாயகர் புகழ்பெற்றிருக்க மாட்டார். ஆக, விளையாட்டை விளையாட்டாக அணுகத் தெரியாதவர்களாகவே நாம் இருந்துவருகிறோம் என்றே தோன்றுகிறது. மேலும், பேட்டிங் விநாயகர், பவுலிங் விநாயகர், ஃபீல்டிங் விநாயகர் உள்ளிட்ட விநாயகர் சிலைகளைப் பார்க்கும்போதும், “ஓம் பவுண்டரி அடிப்போனே போற்றி” போன்ற மந்திர உச்சாடனங்களைப் படிக்கும்போதும் நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் எனும் கேள்வியும் எழுகிறது.

விளையாட்டை வழிபாட்டில் நுழைத்து, வழிபாட்டை விளையாட்டாக்கிவிடும் ஆபத்தான போக்குகளை முளையிலேயே களைவதே நல்லது.

- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்