இப்படிக்கு இவர்கள்: நாளொரு காட்சி.. பொழுதொரு அவலம்!

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் தொடரும் அவலங்கள் மக்களுக்கு மிகப்பெரிய தலைக்குனிவையே ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதாகத் தெரியவில்லை. சுயமதிப்பீடுகளின் அடிப்படையிலும் சுயலாபங்களின் கணக்கீடுகளிலும் மட்டுமே கவனம் செலுத்துவது வெளிப்படையாகத் தெரிகிறது. மக்கள் பிரதிநிதிகளை இத்தனை நாட்களுக்குத் தனிமைப்படுத்தி வைக்கலாமா? ஒரு தனி நபரோ அல்லது ஒரு குழுவோ கட்சியின் லாபத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா? அதற்காக மக்களையும் சட்டத்தையும்கூட வளைக்கலாமா?

இவை வேதனைக்குரியவை மாத்திரமல்ல.. வருத்தத்துக்குரியதுமாகும். தமிழக சட்டமன்ற சபாநாயகர் - எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஒருவிதமாகவும், எதிர்க்கட்சியினர் - ஓபிஎஸ் தரப்பினர் வேறுவிதமாகவும் அறிக்கைகளை வெளியிட்டு, தங்கள் தரப்பு நியாயத்தை முதன்மைப்படுத்தி வருகின்றனர். இத்தகைய அவல நிலைக்குக் காரணம் யார் என்று ஆராயவோ, அதை உணர்ந்து சரிசெய்துகொள்வதற்கோ யாருக்கும் நேரமில்லை என்பது இன்னும் கவலைக்குரிய விஷயம்.

- டி.பாபு தாமஸ், மின்னஞ்சல் வழியாக.



காலத்தின் கட்டாயம்

அரவிந்தனின் ‘மக்கள் கருத்துக்கு என்ன மரியாதை’ என்ற கட்டுரை நன்று. தமிழகத்தின் இன்றைய அரசியல் நிலை கட்டுரையில் தெளிவாகப் படம்பிடித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது. ஒரு முடிவு எடுக்கும் முன் அனைத்து அரசியல் கட்சிகளும் நம் நாட்டில் இப்போது உள்ள ஊடக வளா்ச்சியை, சமூக வலைதளங்களை தங்கள் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

- சிவகுமார், கோயம்புத்தூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

55 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

வாழ்வியல்

24 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

மேலும்