இப்படிக்கு இவர்கள்

By செய்திப்பிரிவு

டாக்டர் கு.கணேசன்,

இராஜபாளையம்.

தண்ணீர் குடிக்கத்

தயக்கம் வேண்டாம்!

மே

30 அன்று இந்து தமிழ் நாளிதழில், ‘அளவுக்கு அதிகமாகக் குடிக்கக் கூடாது தண்ணீரையும்!’ என்ற கட்டுரையைப் படித்தேன். நம் நாட்டில் குறைவாகத் தண்ணீர் குடித்து, அதனால் பல வழிகளில் ஆரோக்கியம் கெட்டு அல்லல்படுகிறவர்கள்தான் அதிகம். இவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, இன்னும் பயந்து தேவையான தண்ணீரைக் குடிக்கத் தயங்கலாம். மற்றவர்களுக்குத் தயக்கம் தேவையில்லை. இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் போன்ற நோயுள்ளவர்கள் மட்டும் தேவைக்கு மேல் தண்ணீர் குடித்தால் ஆரோக்கியத்துக்குச் சிக்கல் வரும். ஆனால், அதையும் அவர்களின் உடல் ஆரம்பத்திலேயே காட்டிக்கொடுத்துவிடும். முகம், வயிறு, கால்கள் வீங்கும். இதனால் இவர்களாலும் அதிகமாகத் தண்ணீர் குடிக்க முடியாது.

நமக்கெல்லாம் காபி, தேநீர் குடிக்கும் பழக்கம் அதிகம். இந்த இரண்டும் நம் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக் கூடியவை. இதை ஈடுகட்ட இப்பழக்கம் உள்ளவர்கள் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். அசைவம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், புரதச் சத்துள்ள உணவுகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கும் மற்றவர்களைவிட இயல்பிலேயே தண்ணீர் அதிகம் தேவைப்படும். இதை ஈடுசெய்யவில்லை என்றால், மலச்சிக்கல் போன்ற தொல்லைகள் தொடரும்.

சாதாரணமாக ஒரு கிலோ உடல் எடைக்கு 30 மில்லி என்ற அளவுக்குக் குறையாமல் தண்ணீர் குடித்தால் சிக்கல் இல்லை. இது பொதுவான கணக்கு. வயது, வளர்ச்சி, உடற்பயிற்சி, விளையாட்டு, உடலுழைப்பு, கர்ப்பம், தாய்ப்பாலூட்டும் காலம், வெயில், நீரிழிவு போன்றவை தண்ணீரின் தேவையை அதிகப்படுத்தும். அப்போது தினசரி அருந்தும் தண்ணீரின் அளவை அதிகப்படுத்த வேண்டியது அவசியம்.

அ.ஜெய்னுலாப்தீன், சென்னை.

கொல்கத்தாவில் ஐந்து ரூபாய்!

செ

ன்னை மெட்ரோ ரயில்களில் டிக்கெட் விலை, மற்ற நகரங்களைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது என்ற செய்தி ‘பணக்காரர்களுக்கு மட்டுமானதா சென்னை மெட்ரோ?’ என்கிற நேர்காணலில் (மே 29 ) தெளிவுபடுத்துகிறது. டிக்கெட் விலை குறைந்தால்தான், ரயில் பயணிகளின் எண்ணிக்கை கூடி, எதிர்பார்த்தபடி சாலைப் போக்குவரத்து நெருக்கடி குறையும். கொல்கத்தாவில் மட்டும் ஐந்து ரூபாய்க்கு மெட்ரோ ரயில் எப்படி ஓடுகிறது? டெல்லி மெட்ரோ ரயில் குழுவைப் போல, சென்னையிலும் குழு அமைத்து, பயணியர் அமைப்புகளின் குரல்கள் கேட்கப்பட்டு, அவை களையப்பட வேண்டும்.

வி.வெங்கட், அரசுப் பள்ளி ஆசிரியர், பூசணியூத்து.

புதிய பாடமும் புதிய பாதையும்!

நி

கழ உள்ள புதிய பாடநூல் மாற்றங்கள் தொடர்பான இந்து தமிழ் நடுப்பக்கத் தொடர் முயற்சி பாராட்டத்தக்கது. கற்றல் கற்பித்தல் நிகழ்வில் ஆகச் சிறந்த கருவி பாடப் புத்தகங்களே! வலிந்து திணிக்காமல் தானே விரும்பிப் படிக்கும் வகையில் பாடப் புத்தகங்கள் மாணவர்களின் மனதோடு நெருக்கமாக அமையப்பெறின், கற்றல் தானாகவே நிலைபெறும்; கற்றல் ஒருபோதும் சுமையாகாது. புதிய தொழில் நுட்பங்கள், போட்டித் தேர்வு என காலத்தோடு பயணிக்க தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பேருதவியாகப் புதிய பாடதிட்ட நூல்கள் அமையும் என்பதில் ஐயமில்லை. ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’, எர்னஸ்ட் ஹெமிங்கேயின் ‘கிழவனும் கடலும்’ தமிழகப் பாடத்திட்டத்தில் இடம்பெறுவதை அறிந்தபோது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. பாடநூல் குழுவின் ஒப்பற்ற முயற்சிக்கு ஓர் ஆசிரியனாக மனமார்ந்த வாழ்த்துகள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

10 hours ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

21 mins ago

சுற்றுலா

43 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

56 mins ago

உலகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்